தோனி என்னிடம் வந்து இதை சொன்னதே எனக்கு பெரிய கவுரவம்.. அவர் தான் உதவினார் – தோனி பற்றி துஷார் தேஷ்பாண்டே !

கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக முக்கிய பந்து வீச்சாளராக விளங்குபவர் துஷார் தேஷ்பாண்டே. இரண்டு சீசன்களாக சென்னைக்காக அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் முதுகெலும்பாக செயல்பட்டார்.

- Advertisement -

துவக்கத்தில் துஷார் தேஷ்பாண்டே சரியாக செய்யவில்லை. சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பயங்கரமாக கடுப்பானார்கள். அந்த நேரத்தில் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் பக்கபலமாக இருந்து அறிவுரை வழங்கி உதவினார் என புகழ்ந்து உள்ளார்.

- Advertisement -

மும்பையைச் சேர்ந்த துஷார் தேஷ்பாண்டே ஐ.பி.எலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அறிமுகமானார். அந்த சீசனில் 5 போட்டிகளில் 3 விக்கெட்டுகள் மட்டுமே கைபெற்றி மிச்சப் போட்டிகளில் வாய்ப்பில்லாமல் அமர்ந்திருந்தார். பிறகு அடுத்த ஆண்டு ஏலத்தில் சென்னை அணியில் இணைந்தார். 2023 & 2024 முழுக்க அனைத்துப் போட்டிகளிலும் அணிக்கு பங்களித்தார்.

- Advertisement -

2023இல் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி கோப்பையையும் வென்றார். கடந்த ஆண்டும் சிறப்பான பந்துவீச்சை தொடர்ந்து வெளிக்காட்டி 17 விக்கெட்டுகள் எடுத்தார். 2023இல் விக்கெட்டுகள் எடுத்தாலும் ரன்கள் வாரி வழங்கினார், அதனை இந்த ஆண்டு சரி செய்தது அவரது பெரிய பலம். இந்த உழைப்பால் இந்திய டி20ஐ அணியிலும் அறிமுகம் ஆகியுள்ளார். அண்மையில், தோனி அவர் மேல் வைத்த நம்பிக்கை பற்றி பேசினார்.

அவர் கூறியதாவது, ” சர்வதேச அளவில் பெரிய வெற்றியைப் பெற உனக்கு அனைத்துத் திறனும் உள்ளது. அதற்கு மைதானத்தில் அந்த வித அழுத்தத்தையும் எடுதுக்காமல் அமைதியாக பந்துவீச வேண்டும். மேலும் மக்கள் பேச்சுக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என தோனி என்னிடம் கூறினார் ” என்றார்.

- Advertisement -

அவர் இவ்வாறு என்னிடம் பேசியதே எனக்கு பெரிய கவுரவம். ” குஜராத் அணிக்கு எதிராக நான் 2023இல் இரு முறை நான் 50 ரன்களுக்கு மேல் கொடுத்தேன். அப்போது கூட அவர் என்னிடம், நீ சரியாகத் தான் வீசினாய் ஆனால் இன்று உனது நாள் இல்லை, அதனால்தான் இப்படி ஆயிற்று. ஃப்ரீயாக விடு. ” என்றார் எனவும் கூறினார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles