இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி முழுமையாக தனது ஆதிக்கத்தை செலுத்தி இந்தியாவை தன்னுடைய சொந்த மண்ணிலேயே ஒயிட் வாஷ் செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு வரையிலான 18 உள்நாட்டு டெஸ்ட் தொடர் வெற்றிகளை டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியாவின் சாதனைப் ரன்னுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
சொந்த மண்ணிலே வீழ்த்தி விட்டோம்:
இந்த சாதனையை தொடர்ந்து நியூசிலாந்து முன்னாள் கேப்டனான டிம் சவுதி கூறியது என்னவென்றால் “எனது கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், கடந்த பல ஆண்டுகளாக நான் விளையாடிய கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவ்விடங்களில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.
12 வருடங்கள் மற்றும் 18 டெஸ்ட் தொடரின் ஆதிக்கத்தை நியூசிலாந்து அணியானது முடிவுக்கு கொண்டு வர இருக்கிறது. மேலும் டாம் லதன் தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் அணி இந்திய மண்ணிலேயே இந்திய அணியே ஒயிட் வாஷ் செய்ய காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்…”என்றார். 70 வருடங்கள் காணாத வரலாற்று வெற்றியை சுவைக்க இருக்கிறது நியூசிலாந்து அணி.
கனவு நிறைவேறியது டிம் சவுதி:
டிம் சவுதி,” நியூசிலாந்தில் இருந்து வரும் எங்களுக்கு, இந்த தொடர் வெற்றியானது பெருமைக்குரிய ஒன்றாக இருக்கும்.எல்லா அணிகளும் மற்ற நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளும் போது அவர்கள் அந்நாட்டில் ஒரு சூப்பர் ஸ்டார் ஆகத்தான் விளையாடுவார்கள் என்று நான் நினைக்கிறேன். இந்த வெற்றியை நான் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஷிப் தொடருக்கு சமமாக ஒப்பிடுகிறேன்”.
மேலும் அவர்,“நான் 2010 ஆம் ஆண்டு இந்திய அணியை திரும்பிப் பார்க்க நினைக்கிறேன், அவர்கள் டெண்டுல்கர், சேவாக், கம்பீர், டிராவிட், லக்ஷ்மண், தோனி போன்றவர்கள், ஒரு இளைஞனாக, இங்கு வந்து அவர்களுக்கு எதிராக விளையாடுவது ஒரு கனவாக இருந்தது உண்மை,” என்று சவுதி கிரிக்பஸ் இணையத்தில் விவரித்தார்.

