தற்போது இந்திய டி20 அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் திலக் வருமா காயம் சரியாகி மீண்டும் வந்து இணைந்திருக்கிறார். இந்த நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வந்திருப்பது குறித்தும், நேற்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடியது குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.
நேற்றைய போட்டியில் மூன்றாவது இடத்தில் களம் இறங்கிய திலக் வர்மா அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். காயம் அடைந்து அணிக்கு திரும்பி இருக்கும் அவருடைய ஆட்டம் மிகவும் சரளமாக இயல்பாக இருந்தது. இதனால் அவர் உடல் தகுதியில் சிறப்பாக இருக்கிறார் என்று தெரிகிறது. இது இந்திய அணி நிர்வாகத்திற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.
இது குறித்து திலக் வர்மா பேசும் பொழுது “நான் காயத்திலிருந்து திரும்பி வந்து இவ்வளவு வேகமாக விளையாடுவேன் என்று நினைக்கவே இல்லை. இதற்காக என்சிஏ மற்றும் பிசிசிஐ இருவருக்கும் நான் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். நான் விளையாட உள்ளே வந்த பொழுது என் பெயரை கத்தி ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். இது எனக்கு உள்ளே வந்து விளையாடுவதற்கு பெரிய ஊக்கமாக அமைந்தது”
“மேலும் அபிஷேக் ஷர்மா மற்றும் இசான் கிஷான் இருவரும் அதிரடியாக விளையாடியது நானும் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. பயிற்சி போட்டிக்கு மைதானம் முழுவதும் ரசிகர்கள் வந்திருந்தது எனக்கு ஆச்சரியத்தை உண்டு செய்தது. அவர்களுக்கு என் நன்றி. தற்போது நானும் இந்திய அணியும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

