நேற்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் திலக் வர்மா பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் வந்ததோடு அதிரடியாக விளையாடி 16 பந்தில் 44 ரன்கள் எடுத்தார். மேலும் இந்திய அணி இந்த நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிகபட்ச ஸ்கோர் ஆக 256 ரன்களை பதிவு செய்தது.
நேற்றைய போட்டியில் இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடிய போதிலும், சில இடங்களில் கொஞ்சம் மெதுவாகவும் விளையாடி போட்டியை நகர்த்தி எடுத்து வந்தார்கள். இவர்களின் அணுகுமுறை இந்திய அணி ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் திலக் வர்மா தற்போது இதற்கு எதிர்ப்பதமாக பேசியிருக்கிறார்.
இதுகுறித்து திலக் வர்மா கூறும் பொழுது “நேற்று சஞ்சு சாம்சன் அதிரடியாக தொடங்கி வைத்தார். தாங்கள் அதை எல்லோரும் முன்னோக்கி எடுத்துச் சென்றோம். பவர் பிளேவில் நான்கு விக்கெட் போனாலும் கூட அனைவரும் தொடர்ந்து ஒரே முறையில் அதிரடியாக விளையாட வேண்டும் என்று பேசிக் கொண்டோம். நாங்கள் எல்லா பந்தையும் அடித்து விளையாட விரும்புகிறோம் என்பதை எதிர் அணிக்கு காட்ட விரும்புகிறோம்”
“நான் அனுப்பி என்ன தேவை என்றாலும் அதை செய்வதற்கு தயாராக இருக்கிறேன் என்று எப்பொழுதும் சொல்லி வந்திருக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அணியில் இந்த இடங்களில் நான் விளையாடி இருக்கிறேன். என்னால் சூழ்நிலைக்கு ஏற்ற முறையில் விளையாட முடியும்” என்று கூறி இருக்கிறார்.

