தற்போது இந்திய டி20 அணியில் உள்ள 15 வீரர்களும் உடல் தகுதியுடன் திரும்பி வந்திருக்கிறார்கள். நேற்று வாஷிங்டன் சுந்தர் முழு உடல் தகுதியை பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டிக்கு ஒட்டுமொத்த இந்திய அணியும் தயாராக இருப்பதாக திலக் வர்மா கூறியிருக்கிறார். மேலும் பாகிஸ்தான் போட்டியை தாண்டி ஒரு முக்கியமான விஷயத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் அரசாங்கம் இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் அணிக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நிலவி வந்த எல்லா குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் இன்னொரு முக்கியமான விஷயமாக நெதர்லாந்து, அமெரிக்கா, நேபாள், ஸ்காட்லாந்து என எல்லா அணிகளும் பெரிய அணிகளுக்கு அச்சுறுத்தலை கொடுத்து வருகின்றன. இதன் காரணமாக உலகக்கோப்பை தொடர் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
இதுகுறித்து திலக் வர்மா பேசும் பொழுது ” நான் உண்மையைச் சொல்கிறேன் நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறோம். இப்போது ஒட்டுமொத்த இந்திய அணியும் ஒவ்வொரு வீரர்களும் இதற்காக தயாராக இருக்கிறார்கள். அதே சமயத்தில் நாங்கள் எல்லா அணிகளையும் அதில் உள்ள பேட்டர்கள் மற்றும் பவுலர்களையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகிறோம். தற்போது நாங்கள் மேட்ச் ஜோனில் இருந்து திட்டமிடலை நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

