காயம் ஆனதும் ரொம்ப பயந்தேன்.. ஆனா என்னை முழுவதுமாக தேற்றியா அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும் – திலக் வர்மா பேட்டி

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் காயத்திற்கு பின்னர் களம் இறங்கிய மிடில் வரிசை பேட்ஸ்மேன் திலக் வர்மா நன்றாக விளையாடி 19 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். இவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு முன்பாக இந்திய உள்நாட்டுத் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் பங்கு பெற்ற நிலையில் அடிவயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து டி20 தொடரை விட்டு விலகினார்.

- Advertisement -

டி20 உலக கோப்பைக்கு முன்பாக திலக் வர்மா தகுதி பெற்று விடுவாரா? என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், எதிர்பார்த்தது போலவே உலகக் கோப்பைக்கு முன்பாக 100% உடல்நலம் தேறி மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்திருக்கிறார். அதேபோல மீண்டும் பழையபடி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதன் மூலமாக தான் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து வந்ததற்கு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். எனது காயத்தின் போது எனக்கு சில சந்தேகங்கள் இருந்தன. ஆனால் தேசிய கிரிக்கெட் அகாடமி தான் என்னை நன்றாக கவனித்து முழுவதுமாக தேற்றி என்னை மீண்டும் களத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பது எனது கனவாகும். அந்தக் கனவு தற்போது நனவாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles