எங்களை விமர்சித்தவர்களுக்கு இந்த வெற்றி பதில் கொடுத்துள்ளது.. 27 ஆண்டுகளில் சூரியன் எங்களுக்காக உதித்திருக்கிறது.. பவுமா நெகிழ்ச்சி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. இதன் மூலமாக 27 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி முதல்முறையாக ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதனால் தென்னாப்பிரிக்கா அணியின் அனைத்து வீரர்களும் உணர்வுப்பூர்வமாக இருந்தனர்.

- Advertisement -

இந்த போட்டியின் மூலமாக டெம்பா பவுமா டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக ஒரு போட்டியில் கூட இதுவரை தோற்கவில்லை என்ற சாதனையை தொடர்ந்து வருகிறார். கிரேம் ஸ்மித், பொல்லாக், டி வில்லியர்ஸ், டூ பிளசி என்று எத்தனையோ கேப்டன்களால் முடியாததால் தென்னாப்பிரிக்காவுக்காக டெம்பா பவுமா சாதித்து காட்டியுள்ளார்.

- Advertisement -

பவுமா பேட்டி

இந்த வெற்றிக்கு பின் பவுமா பேசும் போது, கடந்த 2 நாட்களாக எங்களுக்கு ஸ்பெஷலாக இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் இருப்பதை போன்ற ஆதரவு எங்களுக்கு கிடைத்தது. ஒரு அணியாகவும் ஸ்பெஷலான தருணம். இந்த நினைவுடன் இன்னும் 2 நாட்கள் இருப்போம் என்று நினைக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக கோப்பையை வெல்லவில்லை என்றாலும், எங்களுக்குள் வெல்ல வேண்டும் என்ற எனர்ஜி இருந்து கொண்டே இருந்தது.

- Advertisement -

ஒவ்வொரு ஐசிசி தொடரிலும் கதவுகளை உடைக்க முயற்சித்து கொண்டே இருந்தோம், சில நேரங்களில் ஏற்க முடியாத தோல்வியை அடைந்தோம், ஏமாற்றங்களை சந்தித்தோம். இத்தனை ஆண்டுகளுக்கு பின் சூரியன் எங்களுக்காக உதித்துள்ளது. இந்த வெற்றி இன்னும் எங்களுக்கு ஏராளமான வெற்றியை கொண்டு வரும்  என்று நம்புகிறேன். ரபாடா மிகப்பெரிய வீரர்.

விமர்சித்தவர்களுக்கு பதிலடி

இன்னும் 2 ஆண்டுகளில் ஐசிசியின் மிகப்பெரிய கவுரவத்தை ரபாடா பெறப் போகிறார். அவர் இந்த போட்டிக்கு முன்பாக சில சர்ச்சையில் சிக்கினார். ஆனால் களத்தில் அவரால் என்ன செய்ய முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார். மார்க்ரம் ஒரு ஜாம்பவான் வீரர். சில நேரங்களில் நம்பர்கள் முக்கியம். ஆனால் ஒரு கேப்டனாக எனக்கு வீரரின் குணம் முக்கியம். தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய வீரர் அவர்.

- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு வந்த போது, எங்களின் பாதையை பலரும் கேள்வி எழுப்பினார்கள். எளிய அணிகளை வீழ்த்திவிட்டு இறுதிப் போட்டிக்கு வந்ததாக விமர்சித்தார்கள். இந்த வெற்றி அவர்களுக்காக தான். அதேபோல் தென்னாப்பிரிக்காவில் உள்ள மக்கள் நிச்சயம் கொண்டாட தொடங்கி இருப்பார்கள். ஒரு நாடாக ஒற்றுமையை நோக்கி பயணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles