சந்தேகமே வேணாம்.. இந்த தடவை டி20 உலக கோப்பை இவங்களுக்கு தான்.. டேரன் சாமி திட்ட வட்டம்

எட்டாவது டி20 உலகக்கோப்பைத் தொடரானது வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. 20 அணிகள் கலந்து கொள்ளும் முதல் டி20 உலகக் கோப்பைத் தொடர் என்பதால் இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதேபோல் இங்கிலாந்து அணி இரண்டு முறையும், வெஸ்ட் இண்டீஸ் அணி 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டில் இரண்டு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதோடு இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும் கோப்பையை வென்றுள்ளன.

- Advertisement -

2007ஆம் ஆண்டு எம் எஸ் தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதற்குப் பிறகு இதுவரை ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை. இதனால் ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் விளையாட போகும் இந்திய அணி கோப்பையை வெல்ல அதிக முனைப்புக் காட்டி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் உலகக் கோப்பைத் தொடர் நெருங்கும் வேளையில் 2024 ஆம் ஆண்டுக்கான சாம்பியன் பட்டத்தை பெறப்போவது யார்? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி உலகக் கோப்பையை வெல்லப் போகும் அணி குறித்து சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இவர் 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பதவி வகித்தவர். கோப்பையை வெல்லப் போகும் அணி குறித்து அவர் கூறியதாவது
“2023 ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 தொடரை இழக்கவில்லை. மிகுந்த நம்பிக்கையுடன் ஒவ்வொரு தொடரையும் விளையாடி வருகிறோம்.

- Advertisement -

கடந்த காலங்களை விட இம்முறை வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக செயல்பட்டு நாங்கள் முன்னேறி வரும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முறை எங்கள் சொந்த மண்ணில் உலகக் கோப்பைத் தொடர் நடைபெறுவதால் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன். களத்தில் நாங்கள் முதல் அணியாக இருப்போம்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சர்வதேச போட்டிகளில் அதிகம் விளையாடியது இல்லை என்றாலும் பல்வேறு நாடுகளில் நடக்கும் உள்ளூர் டி20 தொடர்களில் விளையாடி அதிக அனுபவத்தை பெற்றுள்ளனர். அது அவர்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். எனவே இம்முறை கோப்பையை வெல்ல எங்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது” என்று டேரன் சமி கூறினார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles