எனது உலக சாதனை ரன்களை முறியடிக்க இந்த இந்திய வீரர் ஒருவரால் மட்டுமே முடியும் என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவான் லாரா தெரிவித்துள்ளார். அவர் இந்த புதிய தலைமுறையின் ஒரு திறமையான பேட்டர் என்று கூறுகிறார்.
சாதனை என்பதே உடைபடக்கூடியது தான். ஆனால் உடைக்க முடியாத சாதனைகள் என்றும் சில சாதனைகள் உள்ளன. அது எவ்வளவு காலமானாலும் அதற்கு அழிவு என்பது இல்லை. எடுத்துக்காட்டு சச்சினின் 100 சர்வதேச சதங்கள், முத்தையா முரளிதரனின் 800 டெஸ்ட் விக்கெட்டுகள், லாரவின் டெஸ்ட் 400 ரன்கள், ரோஹித்தின் ஒரு நாள் போட்டி ரன்கள் 264.
இவை அவ்வளவு எளிதில் யாராலும் நெருங்க முடியாத ஒன்று. இவை காலத்துக்கும் அவர்களது சாதனையில் ஒரு மணிமகுடமாக இருக்கும். அப்படி ஒன்று தான் லாரவின் 400 டெஸ்ட் ரன்கள். 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 400 ரன்களை அடித்த முதல் மற்றும் இன்றுவரை ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை லாரா பெற்றுள்ளார்.
1994 இல் டர்ஹாமுக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் வார்விக்ஷயர் அணிக்காக இடது கை ஆட்டக்காரர் ஆட்டமிழக்காமல் 501 ரன்கள் எடுத்தார்.
ஆனால் இவரது சாதனையை, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஒருமுறை டெஸ்டில் இவர் சாதனையை நெருங்கி வந்து 331 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த லாரா, இந்திய வீரர் கில்லின் செயல்பாடு குறித்து பாராட்டிப் பேசியுள்ளார்.
அதில் அவர் “கில் ஒரு திறமையான இளம் வீரர். கில் ஒரு சதம் கூட உலக கோப்பையில் அடிக்கவில்லை. ஆனால் அவரது முந்தைய ஆட்டங்களைப் பாருங்கள். அவர் அனைத்து வடிவக் கிரிக்கெட்டிலும் சதம் அடித்துள்ளார். மேலும் ஒரு நாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்துள்ளார். ஐபிஎல்இல் பல மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களையும் ஆடியுள்ளார்.
எனது டெஸ்ட் கிரிக்கெட் 400 ரன்கள் சாதனையையும், 1994இல் டர்ஹாமுக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் வார்விக்ஷயர் அணிக்காக அடித்த 501 ரன்கள் சாதனையையும் முறியடிக்க முடியும்.
வரும் ஆண்டுகளில் அவர் கிரிக்கெட்டை ஆழ்வார் மேலும் பல சாதனைகளை நிகழ்த்துவார்” என்று கூறி இருக்கிறார். மேலும் சமீபத்தில் ஹர்திக் பாண்டியாவின் விலகளுக்குப் பிறகு இவர் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டர். அவர் அணியை எப்படி வழிநடத்துகிறார் என்பதைக் காண ரசிகர்களிடமும் கிரிக்கெட் ஆர்வலர்களிடமும் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

