கொஞ்சமும் நியாயம் இல்ல.. இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணம்.. அம்பையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராகுல் டிராவிட்.. நடந்தது என்ன.?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது.

- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நேற்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது மழை வர வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவித்து இருந்ததால் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 19.3 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து 7 விக்கெட் இழந்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். இந்திய அணியின் பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ் 56 ரன்களும் ரிங்கு சிங் 68 ரண்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து டக்வேர்த் லிவிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த இலக்கை துரத்தியாடிய தென்னாப்பிரிக்கா 14 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் 30 ரண்களும் ஹென்றிக்ஸ் 49 ரன்களும் எடுத்தனர். இந்தப் போட்டியில் நடுவர்கள் நடந்து கொண்ட விதம் சரி செய்ய ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைய போட்டியில் இந்திய அணி இறுதி ஓவர் பேட்டிங் செய்த போது மழை குறிக்கிறது. இதனால் போட்டி ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக தொடங்கப்பட்டது.

15 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு மறுசீரமைக்கப்பட்ட டார்கெட் கொடுக்கப்பட்டது. எனினும் ஆடுகளத்தின் தன்மை போட்டி நடத்துவதற்கு உகந்ததாக இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது. இந்திய அணியின் பந்து வீச்சின் போது டைம் அவுட் நேரத்தில் இது தொடர்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கள நடுவர்களிடம் தீவிரமான விவாதத்திலும் ஈடுபட்டிருந்தார்.

- Advertisement -

மேலும் ஆடுகளத்தில் இருந்த வீரத்தையும் நடுவர்களிடம் சுட்டிக்காட்டி இருந்தார் ராகுல் டிராவிட். போட்டி நடைபெற்ற ஆடுகளத்தின் அவுட் ஃபீல்டில் இருந்து தண்ணீர் முற்றிலுமாக வெளியேறியது போல் தோன்றியது எனினும் அதிகமான அளவு தண்ணீர் தேங்கி இருந்திருக்கிறது. இதனை இந்திய அணி வீரர்கள் பில்டிங் செய்யும் போதும் காண முடிந்தது.

மேலும் ஆடுகளம் ஈரத்துடன் இருந்ததால் இந்திய அணி வீரர்களால் பந்தை கிரிப் செய்து வீச முடியவில்லை. இதனால் அதிகமான ரன்கள் சென்றதும் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. மேலும் ஈரப்பதத்தின் காரணமாக வீரர்களுக்கு காயம் ஏற்படக்கூடிய அபாயமும் இருந்தது. இது போன்ற ஒரு சூழலில் போட்டியை தொடங்குவதற்கு நடுவர்கள் எப்படி சம்மதித்தார்கள்.? என்பது தொடர்பாக ராகுல் டிராவிட் அவர்களிடம் தீவிரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

மழை நின்ற பின்பும் பணத்தில் இருக்கும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றிய பிறகுதான் போட்டியை நடத்த வேண்டும். இதன் மூலம் எந்த ஒரு அணிக்கும் சாதகமில்லாமல் இருப்பதோடு வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். ஆனால் இந்தப் போட்டியில் ஆடுகளத்தில் அதிகமான ஈரம் இருந்தும் நடுவர்கள் போட்டியை நடத்த எப்படி சம்மதித்தார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. மேலும் அவர்களது செயல் ஒருதலை பட்சமாக இருந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles