பாவம்ங்க இவர் நிலைமை.. கிரிக்கெட் வாழ்விலும் தோல்வி.. சொந்த வாழ்வில் ஏற்படும் சறுக்கல்.. பாண்டியாவுக்காக வருந்தும் ரசிகர்கள்

தற்போது இந்திய அணியின் துணை கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் ஹர்திக் பாண்டியா. இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பதவியேற்ற பிறகு இவரது தலைமையில் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் நான்கு போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறியது.

- Advertisement -

குஜராத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கொண்டிருந்த போது நன்றாக சென்ற இவரது வாழ்க்கை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தாரோ என்னவோ அன்றிலிருந்து இவரது கிரிக்கெட் வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் பிரச்சனைகள் சூழ ஆரம்பித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக பதவியேற்ற பிறகு சொந்த மாநில ரசிகர்களாலேயே விமர்சிக்கப்பட்டார்.

- Advertisement -

தற்போது அவரது தனிப்பட்ட வாழ்விலும் பிரச்சனைகள் சூழ ஆரம்பித்துள்ளது. அவரது மனைவியும் பிரபல செர்பிய நாட்டு மாடல் மற்றும் நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக் பாண்டியாவை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடாஷா இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் எந்தப் போட்டியையும் காண வரவில்லை. மேலும் இன்ஸ்டாகிராமில் இவரது பெயருக்கு பின்னால் இருந்த பாண்டியாவின் பெயரை நீக்கி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த மார்ச் 4ம் தேதி நடாஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஹர்திக் பாண்டியா எந்தவித வாழ்த்துக்களையும் சமூக வலைதளத்தில் தெரிவிக்கவில்லை. இது போன்ற சூழலில் நடாஷா தனது பெயரை நீக்கி உள்ளதால் இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை ஹர்திக் பாண்டியா தனது மனைவியை விவாகரத்து செய்ய நேரிட்டால், தனது சொத்தில் இருந்து 70 சதவீதத்தை ஜீவனாம்சமாக வழங்க நேரிடும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் ஹர்திக் பாண்டியா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சம்பாதித்த பெரும் பகுதி பணத்தை இழக்க நேரிடும். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி தோல்வி, ஒரு அணி வீரராகவும் தோல்வி, தனிப்பட்ட வாழ்விலும் தோல்வி, மனைவியுடன் விவாகரத்து, சொத்துக்களை இழக்க நேரிடுவது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பாண்டியா பெரும் சோகத்திற்கு ஆளாக இருப்பது ரசிகர்களிடையே தற்போது மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பாண்டியா இப்படி ஒரு பிரச்சனையை சந்தித்து வருவது அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், இந்திய அணிக்கும் அபாயம் ஏற்படும் நிலையில் உள்ளது.

இதையும் படிங்க:என்னால் நம்பவே முடியவில்லை.. 48000 பேர் 7ம் நம்பர் ஜெர்சி அணிந்திருந்தனர்.. திகைப்புடன் பேசிய ஜஸ்டின் லாங்கர்

செர்பியாவில் பிறந்து வளர்ந்த நடாஷா 2012ஆம் ஆண்டு முதல் நடிப்பிற்காக இந்தியாவில் வாழ்ந்து வருகிறார். இந்தி படங்களில் நடித்த மூலம் ஹர்திக் பாண்டியா உடன் பழக்கமானார். பின்னர் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு அதற்குப் பிறகு திருமணம் செய்து கொண்டனர் 2013ஆம் ஆண்டு முதல் இந்தியில் நடித்து வரும் நடாஷா ஹிந்தி பிக் பாஸ் தொடரில் பங்கேற்று பிரபலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles