13 வயசு கோடீஸ்வர ஐபிஎல் வீரர்… பாகிஸ்தான் போட்டியில் நடந்த சோகம்.. இந்திய அணி U-19 ஆசிய கோப்பையில் தோல்வி

கடந்த வாரம், பீகாரைச் சேர்ந்த புதிய இடது-கை பேட்ஸ்மேனாக வைபவ் சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூபாய் 1.10 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு ஐபிஎல் இல் புதிய சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சர்வதேச போட்டியில் சோபிக்க தவறிவிட்டார்.

- Advertisement -

முதல் போட்டி:

ACC U-19 ஆசிய கோப்பை 2024 இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியானது துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது, இதில் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யவன்ஷி ஐந்தாவது ஓவரில் அலி ராசா வீசிய பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா U19 எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் இந்தியாவின் U19 அணிக்காக விரைவான நூறு ரன்களை அடித்திருந்தார், சூர்யவன்ஷி.

- Advertisement -

விளையாட்டில் மட்டுமே கவனம் என கருத்து:

“நான் தற்போது என் விளையாட்டில் கவனம் செலுத்துகிறேன். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை குறித்து நான் கவலைப்பட போவதில்லை” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றுக்கு பதில் அளித்திருந்தார்.

மேலும் அவர், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக,“ நான் மேற்கிந்திய தீவுகளின் புகழ்பெற்ற பிரையன் லாராவின் ரசிகன்” என வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

திறமைகள் நிறைந்த வீரர்:

“அவர் (சூர்யவன்ஷி) சில நல்ல திறமைகளைக் கொண்டுள்ளார், எனவே அவர் மென்மேலும் வளர நாங்கள் அவருக்கு நல்ல சூழலை அமைத்து தர முயற்சித்திருக்கிறோம். வைபவ் பயிற்சிக்கு வந்தார், அவரே பார்த்ததில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார் ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் டிராவிட், ஒரு IPL வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles