முடிவுக்கு வருகிறதா கோலி ரோஹித் சகாப்தம்.? இன்று டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி.. பிரியா விடை கொடுக்க காத்திருக்கும் ரசிகர்கள்

உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டி20 உலக கோப்பை இறுதி போட்டி பார்படாசில் உள்ள கென்சிங்டன் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த இறுதிப் போட்டி விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு டி20 ஃபார்மெட்டில் கடைசி போட்டியாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அரையிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு, இந்திய கிரிக்கெட் வாரியம் ஹர்திக் பாண்டியா தலைமையிலான புதிய டி20 அணியை உருவாக்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டியது. கிட்டத்தட்ட அவரது தலைமையிலே சில டி20 தொடர்களில் இந்திய அணி பங்கேற்றது. ஆனால் 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறினார்.

- Advertisement -

அதற்குப் பிறகுதான் ரோஹித் சர்மா திரும்பவும் இந்திய அணிக்குள் கொண்டுவரப்பட்டு, விராட் கோலி அணிக்குள் கொண்டுவரப்பட்டார். ரோஹித் சர்மா தலைமையிலேயே உலகக் கோப்பைக்கு இந்திய அணி நிர்வாகம் அணியை தயார் செய்தது. இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி கோப்பையை வென்று கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆவதால் இந்த முறை நிச்சயம் கோப்பையை கைப்பற்றி விட வேண்டும் என்பதே இந்திய அணி வீரர்களின் உத்வேகமாகவும் இருக்கிறது.

ஏனென்றால் 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை அரை இறுதிப் போட்டி, 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி, அதற்கு முன்னர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் தோல்வி என வரிசையாக இந்திய அணி தோல்வியை சந்தித்து வருகிறது இதனால் இந்த முறை நிச்சயமாக தோல்வியில் முடிக்க கூடாது என்பதில் இந்திய அணி உறுதியாக இருக்கும். இந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு இந்திய டி20 அணியில் இடம் இருக்காது என்று தெரிகிறது.

- Advertisement -

அதற்கு உதாரணமாக தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது கில் தலைமையிலான புதிய இந்திய அணி விளையாட உள்ளது. மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை தவிர ரவீந்திர ஜடேஜாவுக்கும் இனி டி20 ஃபார்மெட்டில் இடம் கிடைக்காது என்று தெரிகிறது. ஏனெனில் இந்த டி20 உலக கோப்பையில் ஜடேஜாவின் பங்களிப்பும் பெரிதாக இல்லை.

இதையும் படிங்க:இறுதிப் போட்டியிலும் அச்சுறுத்தும் மழை.. ஆட்டம் ரத்தனால் கோப்பை யாருக்கு.? என்ன சொல்கிறது ஐசிஐசி விதிமுறை

இதனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் சகாப்தம் உலகக் கோப்பையோடு முடிக்க திட்டமிட்டு இருப்பார்கள். இதுவரை இந்திய கிரிக்கெட் அணிக்காக இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி உள்ள நிலையில் உலகக்கோப்பை மட்டுமே அவர்களுக்கு இன்னும் எட்டாக்கனியாக இருக்கிறது. அதனால் இந்திய அணி வீரர்களும் இவர்கள் இருவருக்கும் உலக கோப்பையை வென்று கொடுத்து பிரியா விடை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். அதேபோல இந்திய அணி ரசிகர்களும் இவர்களுக்கு பிரியா விடை கொடுக்க தயாராகி வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles