மீண்டும் ஏமாற்றிய விராட் கோலி.. சிக்கலில் இருந்து தப்பிக்குமா இந்திய அணி.. மீண்டும் காப்பாற்றும் ரோஹித்

கயானாவில் தற்போது நடைபெற்று வருகிற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

அரை இறுதிப் போட்டியில் விராட் கோலி பார்முக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏமாற்றமே அளித்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரை இறுதிப் போட்டி கயானாவில் மழை காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக ஒன்பது மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி மைதானம் மழை பெய்ததால் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி இன்னிங்சை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தொடங்கினார்கள்.

- Advertisement -

விராட் கோலி இந்தப் போட்டியின் மூலம் மீண்டும் பேட்டிங் பார்முக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த வேளையில் சொன்னது போலவே முதல் ஆறு பந்தில் பொறுமை காட்டிய விராட் கோலி ஏழாவது பந்தில் டாப்லீயின் ஓவரை மிட்விக்கெட் திசையில் அபாரமாக ஒரு சிக்சரை அடித்தார். அதன் பிறகு எட்டாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்திருந்த கோலி, ஒன்பதாவது பந்தில் அவரது பந்து வீச்சிலேயே போல்ட் ஆகி வெளியேறினார்.

இதனால் இந்த முறையும் இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. மறுமுனையில் ரோகித் சர்மா ஆடுகளத்தை கணித்து பொறுமையான ஆட்டத்தை கடைப்பிடித்தாலும் அவ்வப்போது ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாசசுவதை அவர் தவற விடவில்லை. விராட் கோலிக்கு பிறகு மூன்றாவது ஆக இறங்கிய பண்ட் இந்த முறை 6 பந்துகளில் நான்கு ரன்கள் குவித்திருந்த நிலையில் சாம் கரணின் பந்துவீச்சில் ஸ்லிப் திசையில் நின்று கொண்டிருந்த பேர்ஸ்ட்டோவிடம் கேட்ச் கொடுத்து பரிதாபமாக வெளியேறினார்.

- Advertisement -

மறுமுனையில் கேப்டன் ரோஹித் சர்மா தனியாக அவர் மட்டும் கேப்டன் இன்னிங்ஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார். இதுவரை 26 பந்துகள் எதிர்கொண்ட நிலையில் ஆறு பவுண்டர்களை அடித்து தற்போது 37 ரன்கள் உடன் களத்தில் இருக்கிறார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து மற்றொரு பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் 7 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 13 ரன்கள் குவித்த நிலையில் களத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க:இந்தியாவுக்காக ஆடுறது அவ்ளோ ஈஸி இல்ல.. அப்படி இந்தியாவுக்கு கிடைத்த தரமான வீரர்தான் இவர்- கவுதம் கம்பீர் பேட்டி

தற்போது மீண்டும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட, போட்டி பதினேழு ஓவர்களாக குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. இருப்பினும் இந்திய அணி இந்த போட்டியில் சவாலான ஸ்கோரை நிர்ணயிக்க வேண்டும். இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டர் இந்திய அணியை போலவே வலுவாக இருப்பதால் குறைந்தது 160 முதல் 170 ரன்கள் வரை இந்திய அணி அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா தற்போது களத்தில் இருப்பதால் அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்து ஒரு வீரர் நின்றாலே போதும். இந்திய அணி தற்போது இரண்டு விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் குவித்திருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles