இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றியைப் பெற்று கோப்பையையும் கைப்பற்றி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இதற்குப் பிறகு டி20 உலக கோப்பையில் இந்திய அணி விளையாட இருப்பதால் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கள் டி20 உலக கோப்பை குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “நாங்கள் எந்த அணிக்கு எதிராக விளையாட இருக்கிறோமோ அந்த அணிக்கு எதிரான தேர்வு செய்வோம். ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டிக்கான ஒரு முன் தொனியை அமைப்பதில் நான் நம்பிக்கை கொண்டவன். இதில் பும்ரா உலகின் சிறந்த பந்துவீச்சாளர். எந்த சூழ்நிலையிலும் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்
எனவே அவருக்கு எந்த சிக்கலும் ஏற்பட்டு விடாமல் அவரை எவ்வளவு வசதியாக வைத்துக் கொள்கிறோம் என்பதில் சில விஷயங்களை நாங்கள் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்கிறோம். எல்லா சூழ்நிலையிலும் பந்து வீசக்கூடிய சில பந்துவீச்சாளர்கள் எங்களிடத்தில் இருக்கிறார்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு வீரர்களை உருவாக்குவது என்று நாங்கள் ஆரம்பத்திலேயே சில முடிவுகளை செய்தோம். அதுதான் தற்போது எங்களுக்கு பெரிய அளவில் கை கொடுத்து வருகிறது என்று பேசி இருக்கிறார்.

