இறுதிக்கட்டத்தில் சொதப்பிய இந்திய அணி.. ரோஹித் சர்மா அதிரடி வீண் டிராவில் முடிந்த போட்டி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் கடைசி கட்டத்தில் இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சால் போட்டி இரண்டு அணிகளுக்குமே வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.

- Advertisement -

இந்த ஒரு நாள் தொடருக்கு முன்னணி வீரர்களான ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பியிருந்தனர்.

- Advertisement -

ரோஹித் சர்மா கேப்டன் ஆன இந்த அணிக்கு ரிஷப் பண்டுக்கு பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டிருந்தார். கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக நிஷான்கா மற்றும் பெர்னான்டோ ஆகியோர் களம் இறங்கினர்.

- Advertisement -

பெர்னான்டோ ஒரு ரன்னில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான நிஷான்கா சிறப்பாக விளையாடி 56 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் களமிறங்கிய மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப, கடைசி கட்டத்தில் வெல்லால்கே அற்புதமாக விளையாடி இலங்கை அணியை நல்ல நிலைக்கு முன்னேற்றினார். 65 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 67 ரன்கள் குவித்ததால் இலங்கை அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது.

இதற்குப் பிறகு பேட்டிங் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கில் 16 ரன்களில் வெளியேற, ரோகித் சர்மா 47 பந்துகளில் 7 பௌண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 58 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு களம் இறங்கிய விராட் கோலி 24 ரன்களும், ஸ்ரேயாஸ் 23 ரன்கள் குவித்தனர். 132 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த கே எல் ராகுல் மற்றும் அக்சார் பட்டேல் கூட்டணி ஓரளவு சிறப்பாக விளையாடியது.

- Advertisement -

இருப்பினும் கேஎல் ராகுல் 31 ரன்களும், அக்சார் பட்டேல் 33 ரன்களில் வெளியேற கடைசி கட்டத்தில் எதிர்பாராதவிதமாக சிவம்தூபே 25 ரன்களில் ஆட்டம் இழந்ததால்,இந்திய அணிக்கு வெற்றி பெற 13 பந்துகள் மீதம் இருந்தும் விக்கெட்டுகள் இல்லாததால் 230 ரன்கள் மட்டுமே குவித்து போட்டி டிராவில் முடிவடைந்தது.

இதையும் படிங்க:இந்திய ODI.. தமிழ் வீரரை களம் இறக்கிய இலங்கை அணி.. யார் இந்த முகமது ஷிராஸ்.?

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே கலக்கிய இலங்கை அணியின் வெல்லால்கே ஆட்டநாயகன் விருது பெற்றார். இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மதியம் நடைபெற இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles