எப்புட்றா.. ஒரே மேட்ச் 11 பவுலர்கள்.. டி20 கிரிக்கெட் வராற்றில் முதல் முறை.. கங்குலி செய்தை திருப்பி செய்த டெல்லி அணி

2024 சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரின் குரூப் சி பிரிவில் இடம் பெற்று இருந்த டெல்லி மற்றும் மணிப்பூர் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி வெள்ளிக்கிழமை மும்பையில் உள்ள வான்கேடே அரங்கில் நடைபெற்றது. மணிப்பூருக்கு எதிரான சையது முஷ்டாக் அலி டிராபி போட்டியின் போது டெல்லி அணியானது தனது 11 வீரர்களையும் பந்துவீச்சாளர்களாக நிறுத்தி புதிய சாதனையை படைத்துள்ளது. இது டி-20 போட்டிகளில் ஒரு அணி தனது அனைத்து வீரர்களையும் பந்துவீச்சாளர்களாக நிறுத்திய முதல் சாதனையாகும்.

- Advertisement -

புதிய யுக்தி:

டாஸ் வென்ற மணிப்பூர் அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து பந்து வீச வந்த டெல்லி அணியின் கேப்டன் ஆயுஷ் பதோனி தனது 11 வீரர்களையும் பந்து வீச அழைத்து ஒரு புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

டெல்லி அணியில் ஹர்ஷ் தியாகி, திக்வேஷ் ரத்தி மற்றும் மயங்க் ராவத் ஆகியோர் ஒவ்வொருவரும் மூன்று ஓவர்கள் வீசினர். ஹர்ஷ் தியாகி 11 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். திக்வேஷ் ரத்தி 8 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மயங்க் ராவத் 31 ரன்களை விட்டுக் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

- Advertisement -

ஆயுஷ் சிங், அகில் சவுத்ரி மற்றும் ஆயுஷ் பதோனி ஆகிய மூவரும் தலா இரண்டு ஓவர்கள் வீசி உள்ளார்கள். ஆயுஷ் சிங் 7 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். கேப்டன் ஆயுஷ் பதோனி 8 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அகில் சவுத்ரி 10 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

ஆர்யன் ராணா, ஹிம்மத் சிங், ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் ஒவ்வொருவரும் ஒரு ஓவர் வீசினர். இதில், ப்ரியன்ஷ் ஆர்யா மட்டும் 2 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆர்யன் ராணா, ஹிம்மத் சிங், அனுஜ் ராவத் ஆகியோர் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

- Advertisement -

இந்த சாதனை டி20 கிரிக்கெட்டில் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது, இதில் எந்த அணியும் ஒரு இன்னிங்ஸில் ஒன்பதுக்கு மேற்பட்ட பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles