சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியே வீழ்த்தியது.
டாஸ் வென்ற வங்காளதேச ஆணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்காளதேச அணியானது தொடக்கத்தில் இருந்தே பேட்டிங்கில் சரிவை சந்தித்த போதிலும், டோவித் ஹிரிடாயின் சதத்தால் 228 ரன்கள் குவித்திருந்தது. அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் கண்ட இந்திய அணி, சுப்மான் கில்லின் சதத்தால் 21 பந்துகள் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதற்கிடையில், வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அணியின் தோல்விக்கு வருத்தம் தெரிவித்தார், மேலும் அவர்கள் களத்தில் இது தவறுகளை தவிர்த்து இருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
ஃபீல்டிங்கில் போட்டியை தவற விட்டு விட்டோம்:
வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ போட்டி முடிவில் கூறியதாவது; “முதலில் பவர்ப்ளேயில், நாங்கள் பேட்டிங் செய்த விதம் சரியல்ல, அந்த நேரத்திலேயே நாங்கள் எங்கள் ஆட்டத்தை இழந்துவிட்டோம் என்று நினைக்கிறேன். நாங்கள் முதலில் செய்த தவறால் லோவர் ஆர்டர் வீரர்களுக்கு மீண்டும் எங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது என்பது மிகவும் கடினமாகிவிட்டது. ஹ்ரிடோய் மற்றும் ஜாகர் அற்புதமாக விளையாடினர்.
பீல்டில் சில தவறுகள் செய்தோம், சில பந்துகளை பிடிக்க தவறி விட்டோம், ஒரு ரன் அவுட்டை தவற விட்டோம். அந்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தியிருந்தால், போட்டியின் முடிவு மாறியிருக்கும். இந்த பிச்சிலும், ஸ்பின்னர்கள் பந்து வீசிய போதிலும், பந்துகள் ஸ்பின்னான போதிலும், ஹ்ரிடோய் மற்றும் ஜாகர் மிகச் சிறப்பாக விளையாடினர். எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மோசமாக பந்துவீசவில்லை. ஆரம்பத்திலேயே ஒரு விக்கெட் எடுத்திருந்தால், முடிவு மாறியிருக்கும்” என கூறினார்.

