இந்திய கிரிக்கெட் வாரியம் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்கி வரும் நிலையில் இன்றைய தேதியின்படி மகேந்திர சிங் தோனி எவ்வளவு ஓய்வூதியம் பெறுகிறார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், டிராவிட், யுவராஜ் சிங், வினோத் காம்ப்ளி போன்ற வீரர்களும் பெரும் ஓய்வூதியத் தொகை என்பது வெளிவந்துள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர கேப்டன் ஆக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி 2007 மற்றும் 11ஆம் ஆண்டு இந்திய அணிக்கு ஒரு நாள் மற்றும் டி20 உலக கோப்பைகளை வென்று கொடுத்து மிகச் சிறந்த கேப்டனாக விளங்கினார். இந்தியாவிற்கே பெருமை தேடித் தந்த கேப்டன்களில் ஒருவரான தோனி தற்போது பிசிசிஐ வழங்கும் ஓய்வூதியத்தில் மாதம் 70 ஆயிரம் ரூபாய் தொகையாக பெற்று வருகிறார்.
எம்எஸ் தோனி வணிகம் மற்றும் விவசாயம் என பல்வேறு துறைகளில் ஒரு சிறந்த பிசினஸ்மேனாக வலம் வருகிறார். தற்போது அவரது சொத்து மதிப்பு 1200 கோடி ரூபாயாக இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே தோனிக்கு 70 ஆயிரம் ரூபாய் ஒரு பெரிய தொகை இல்லை என்றாலும் பிசிசிஐ ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் என்கிற பெயரில் அதை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கவாஸ்கர், சச்சின் மற்றும் டிராவிட் போன்ற ஜாம்பவான்களும் 70 ஆயிரம் ரூபாய் தொகையை பெற்று வருகிறார்கள். மேலும் யுவராஜ் சிங் 60 ஆயிரம் ரூபாயும் வினோத் காம்ப்ளி 30 ஆயிரம் ரூபாயும் பெற்று வருகிறார்கள் என்று குறிப்பிடத்தக்கது.

