நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவடைய உள்ளன, குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் இந்திய கிரிக்கெட் அணி மட்டும் பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லாமல் துபாயில் ஹைபிரிட் மாடல் முறைப்படி விளையாடுவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி மட்டும் ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு பெரிய சாதகமாக அமைந்துள்ளது என குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார்.
இதனை சுட்டிக்காட்டி, “நீங்கள் எந்த இடத்தில் விளையாட வேண்டும், எந்த இடத்தில் விளையாடக்கூடாது என்பதை தேர்ந்தெடுக்க முடியாது… இது இந்த போட்டிகளை ஒரு கேலிக்கூத்தாக மாற்றுகிறது.” என்று கோட் கிரிக்கெட் மேற்கோள் கூறியது.
உடனே, “நான் இதை ஒருபோதும் கூறவில்லை,” என்று கம்மின்ஸ் பதிலளித்தார். பின்னர் X இல் கம்மின்ஸின் பதிவு சமூக ஊடகங்களில் வைரலானதால், அந்தப் பதிவு நீக்கப்பட்டது.
ஆனால் முதலில், இந்தியாவை விமர்சித்தது கம்மின்ஸ் அல்ல, இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஜோனாதன் அக்னியூ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

