இன்னைக்கு பாகிஸ்தான் அணியை ஓட விடுவோம்.. ஏற்கனவே அத செஞ்சிருக்கோம் – அமெரிக்க வீரர் அதிரடி பேட்டி

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று அமெரிக்கா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்த இரண்டு அணிகளும் கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மோதியபோது பாகிஸ்தான் அணிக்கு அமெரிக்கா அணி அதிர்ச்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்க சுழல் பந்துவீச்சாளர் முகமத் மொஹ்சின் இந்த முறையும் பாகிஸ்தான் அணியை வென்று அசத்துவோம் என்று உறுதியாக கூறியிருக்கிறார். ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர்கள் பெற்ற நம்பிக்கை உதவியாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “கடந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறோம். இது எங்களுடைய நம்பிக்கையை மிகவும் அதிகரித்து இருக்கிறது. அதே சமயத்தில் கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் நாங்கள் பாகிஸ்தான் அணியை வென்று இருக்கிறோம். இந்த உலகக் கோப்பை தொடரில் நாங்கள் இழப்பதற்கு எதுவுமே கிடையாது. இப்படி இருக்கும்போது அழுத்தம் எங்கள் பக்கத்தில் இல்லவே இல்லை. மொத்த அழுத்தமும் எங்களிடம் ஏற்கனவே தோல்வி அடைந்துள்ள பாகிஸ்தான் அணிக்குதான் இருக்கிறது. எனவே நாங்கள் எங்கள் இயல்பான ஆட்டத்தை விளையாடி அவர்களை தோற்கடிப்போம்”

- Advertisement -

“கடந்த முறை இருந்த எங்கள் அணி திறமையானது. இந்த முறை இருக்கும் எங்கள் அணியும் திறமையானது. நாங்கள் முன்னோக்கிச் செல்ல பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்ற வெற்றி குறித்து அணி கூட்டத்தில் விவாதித்தோம். தற்போது எங்களுடைய அணி சூழல் மிகவும் சிறப்பாக இருக்கிறது. மேலும் நாங்கள் கடந்த முறை செய்தது போலவே இந்த முறையும் சிறப்பாக போட்டியை விளையாடி பாகிஸ்தான் அணியை தோற்கடிப்போம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles