தெய்வமே.. உங்களால் நான்.. நீங்க இல்லனா நம்பர் 4ல் கதம் கதம்தான்.. புஜாராவை வாழ்த்திய விராட் கோலி

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியோடு இந்திய அணியில் இருந்து புஜாரா நீக்கம் செய்யப்பட்டார். இதன்பின் உள்ளூர் கிரிக்கெட்டில் எவ்வளவோ ரன்களை விளாசிய போதும், புஜாராவை இந்திய அணி கண்டுகொள்ளவில்லை.

- Advertisement -

புஜாராவின் சாதனை

2 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுமை காத்த புஜாரா, இதற்கு மேல் காத்திருக்க விரும்பாமல் ஓய்வை அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி 2 முறை டெஸ்ட் தொடரை வெல்வதற்கு புஜாரா முக்கிய காரணமாக விளங்கினார். அதேபோல் ஒரே இன்னிங்ஸில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்ற சாதனையும் புஜாரா வசமே இருக்கிறது. 

- Advertisement -

2017ல் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 525 பந்துகளை எதிர்கொண்டு இரட்டை சதம் விளாசினார். நம்பர் 3ல் ஆடிக் கொண்டிருந்த ராகுல் டிராவிட் ஓய்வை அறிவித்த பின், உடனடியாக புஜாரா நம்பர் 3ல் பேட்டிங் வரிசையில் களமிறக்கப்பட்டார். இதனால் விராட் கோலி ஆடிய நம்பர் 4ல் சிறப்பாக செயல்பட முடிந்தது.

- Advertisement -

விராட் கோலி வாழ்த்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை தேய்மானம் அடைய வைக்கும் பணியை நம்பர் 3ல் இருந்து புஜாரா சிறப்பாக செய்து வந்தார். இதன் பலன் நம்பர் 4ல் ஆடிய விராட் கோலிக்கு சாதகமாக அமைந்தது. இந்த நிலையில் புஜாரா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை எழுதி இருக்கிறார். 

அதில் விராட் கோலி, நம்பர் 4ல் வரிசையில் பேட்டிங்கில் எனது பணியை எளிமையாக மாற்றிய புஜாராவுக்கு நன்றி.. உங்களின் கிரிக்கெட் வாழ்க்கை அற்புதமான ஒன்று. தற்போது ஓய்வை அறிவித்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்.. 2வது இன்னிங்ஸிற்காக வாழ்த்துகிறேன்.. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். விராட் கோலியின் இந்தப் பதிவு ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles