5 பந்தில் மிட்சல் ரிட்டையர்ட் அவுட்.. 9 பந்துகளில் 5 சிக்ஸ் விளாசிய டோனவன் ஃபெரைரா.. 5 ஓவரில் சம்பவம் செய்த சிஎஸ்கே!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து வாஷிங்டன் ஃபிரீடம் அணி களமிறங்கியது. இந்த போட்டி மழை காரணமாக 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃபிரீடம் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் பவுலிங்கை தேர்வு செய்தார். காயம் காரணமாக் டூ ப்ளசி இந்த போட்டியில் களமிறங்கவில்லை.

- Advertisement -

மிட்சல் ரிட்டையர்ட் அவுட்

இதன்பின் டிஎஸ்கே அணி தரப்பில் கேப்டன் ஸ்டாய்னிஸ் – மிட்சல் இணை தொடக்கம் கொடுத்தது. 2வது பந்திலேயே ஸ்டாய்னிஸ் 2 ரன்களில் ஆட்டமிழக்க, சுபம் ரஞ்சனே களம் புகுந்தார். அவர் அதிரடியாக விளையாடிய போது, மிட்சலால் 5 பந்துகள் வரை எதிர்கொண்டு ஒரு பவுண்டரியை கூட அடிக்க முடியவில்லை. இதனால் அவர் ரிட்டையர்ட் அவுட்டாகி வெளியேறினார். இதனால் 3 ஓவர்களில் டிஎஸ்கே அணி 34 ரன்களை எடுத்திருந்தது.

- Advertisement -

பின் டோனவன் ஃபெரைரா களம் புகுந்தார். நெட்ரவால்கர் வீசிய 4வது ஓவரிலேயே 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 25 ரன்கள் சேர்க்கப்பட, 5வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட 4 சிக்ஸ் விளாசி தள்ளினார். இதனால் டிஎஸ்கே அணி 5 ஓவர்களில் 87 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய டோனவன் ஃபெரைரா 9 பந்துகளில் 37 ரன்களை விளாசினார்.

- Advertisement -

பிளே ஆஃப் சான்ஸ்

தொடர்ந்து வாஷிண்டன் ஃபிரீடம் அணிக்காக மிட்சல் ஓவன் – ரச்சின் ரவீந்திரா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. பர்கர் வீசிய முதல் ஓவரிலேயே ரச்சின் 10 ரன்களிலும், மேக்ஸ்வெல் டக் அவுட்டாகியும் வெளியேற, 2வது ஓவரில் மிட்சல் ஓவன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். கிளென் பிலிப்ஸ் மட்டும் சில பவுண்டரிகளை அடிக்க, வாஷிங்டன் ஃபிரீடம் அணி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 44 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.

இதன் மூலமாக டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 2 சீசன்களாக டிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. இம்முறை டெக்ஸாஸ் அணி அபாரமான ஃபார்மில் இருப்பதால், சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles