இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.. டிஆர்எஸ் மீது சர்ச்சையை கிளப்பிய வங்கதேச வீரர்.. ரவி சாஸ்திரி தரமான பதிலடி

வங்கதேச அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆன ஷட்மான் இஸ்லாம், ஆகாஷ் தீப் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது வர்ணனையில் இருந்த தமீம் இக்பால், அவுட்டை ஒத்துக் கொள்ளாத வகையில்,டி.ஆர்.எஸ் தொழில் நுட்பம் குறித்து கேள்வி எழுப்பும்படி பேசவே, அதற்கு அவருடன் வர்ணனையில் இருந்த ரவி சாஸ்திரி, அதற்கு தக்க பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

கான்பூர் க்ரீன் பார்க் மைதானத்தில் முதல் இன்னிங்ஸ்சை தொடங்கிய வங்கதேச அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷட்மான் இஸ்லாம், ஆகாஷ் தீப் அவர்களின் பதின்மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அப்போது வர்ணனையில் இருந்த தமீம் இக்பால், அந்த பந்து லெக் திசையில் ஸ்லைடிங் டவுன் ஆகி இருக்கும் என்று நினைத்து கொண்டு இருந்த நிலையில், பந்தின் திசையை கண்காணிக்கும் தொழில்நுட்பமோ, பந்து லெக் ஸ்டெம்பை க்ளீனாக அடிப்பது போல காண்பித்தது.

- Advertisement -

தமீம் இக்பாலுக்கு அந்த டிஆர்எஸ் ரிவ்யூ மீது ஒரு அதிருப்தி இருப்பது அவரது முகத்தில் தெரிந்தது. ஆனால் இந்த நிகழ்வை ரவி சாஸ்திரியும், தினேஷ் கார்த்திக்கும் வேறு ஒரு கோணத்தில் பார்த்தனர். அதாவது நடந்தது என்னவென்றால், ஆகாஷ் தீப் பந்து வீசுகிறார், பந்து வந்த கோணம் ஷட்மான் இஸ்லாம் அவர்களை சற்றே திணறடிக்கவே, அவர் பவுன்சருக்கு ரியாக்ட் செய்வது போல க்ரீஸ்சில் மெல்ல ஜம்ப் செய்து பேட்டை திருப்புவதற்குள், பந்து கால் பேடை முட்டி விடுகிறது.

- Advertisement -

ஆகாஷ் தீப் அவுட் கேட்கிறார், அம்பயர் கெட்டில் பாரோ ஆகாஷ் தீப்பின் அவுட் கேட்டலுக்கு சற்றும் செவி சாய்க்கவில்லை, ஆகாஷ் ரீவ்யு எடுக்க சொல்லி ரோஹிட்டை கேட்கிறார், ரோஹிட் ரொம்ப யோசித்து ஒரு கட்டத்திற்கு பின் எடுக்கிறார். உண்மையில் ரீப்ளைவை பார்க்கும் போது பந்து லெக் திசையில் ஸ்லைடிங் ஆவது போல தான் தோன்றியது. ஆனால் பந்தின் திசையை கண்காணிக்கும் தொழில் நுட்பத்தில் மூன்று சிகப்புகள் காண்பித்து அவுட் என்பது உறுதியானது.

உண்மையாக சொல்ல வேண்டுமானால் அது யாருக்குமே அவுட் என்று தோன்றவில்லை, பவுலர் ஆகாஷ் தீப் தவிர. இந்த நிகழ்வு எல்லாம் முடிந்த கொஞ்ச நேரத்தில் தமீம் இக்பால், வர்ணனையில் ஒரு சாடலை கூறினார், அதாவது, இந்த விக்கெட்டை பொறுத்தமட்டில் ”பந்து லெக் திசையில் டவுன் ஆகுவது போல தான் இருந்தது, ஆனால் டிஆர்எஸ்க்கு வேறு ஒரு ஐடியா இருந்து இருக்கிறது” என கூறினார்,

- Advertisement -

அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய ரவி சாஸ்திரி, “இது குறித்து தினேஷ் கார்த்திக்கும், நானும் பல முறை பேசி இருக்கிறோம், நாம் கேமராவில் பார்க்கும் போது, பந்து எப்போதும் நேராக செல்வது போல தெரியாது, அது ஸ்லைடு ஆகுவது போல தான் தோன்றும், இன்னொரு விஷயம் கான்பூரை பொறுத்தவரை பவுன்சர் ஒரு பிரச்சினையாக இருக்காது, அணி வீரர்களுக்குமே இந்த விக்கெட் குறித்து பெரிதும் ஒரு ஐயம் தான், இது விக்கெட் என நம்பிய ஒரே ஒருவர் ஆகாஷ் தீப் மட்டும் தான்” என கூறி இருந்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles