தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இது டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அடித்திருக்கும் நான்காவது சதமாகும். இதன் மூலம் ரோகித் சர்மாவின் சாதனையை சூரியக்குமார் யாதவ் சமன் செய்தார்.
இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் செஞ்சுரி அடிச்சிருந்தாலும் அவரை விராட் கோலி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது சூரியகுமார் யாதவ் தாம் செஞ்சுரி மற்றும் தனிப்பட்ட சாதனை மைல்கல்லுக்காக விளையாடவில்லை.
அணிக்காக தான் விளையாடினேன் என்றும் கூறியிருந்தார். இது அப்போது விராட் கோலி ரசிகர்களை கடுப்படைய செய்தது. விராட் கோலி செஞ்சுரிக்காக விளையாடுகிறார் என்பதை தான் சூரியகுமார் யாதவ் மறைமுகமாக கூறுகிறார் என்று கோலி ரசிகர்கள் அப்போது எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று ஆட்டத்தில் 18.6 வது ஓவரில் சூரியகுமார் யாதவ் எதிர் திசையில் நின்றார். அப்போது ஜித்தேஷ் சர்மா ரன் அடித்தும் சூரியகுமார் யாதவ் ஓட மறுத்துவிட்டார். கடைசி ஓவரை பயன்படுத்தி சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக சூரிய குமார் இவ்வாறு செய்ததாக ரசிகர்கள் கடும் குற்றச்சாட்டி உள்ளனர்.
கோலி சதம் அடிக்கும் போது மட்டும் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாட கூடாது என்று சொல்லிய சூரியகுமார், தற்போது ஏன் கடைசி பந்தில் ரன் ஓட வில்லை என்று கேள்வி கேட்டு வருகின்றனர். ஜித்தேஷ் சர்மா கடைசி பந்தில் ஓடி இருந்தால் கூடுதலாக ஒரு ரன் கிடைத்திருக்கும்.
ஆனால் சூரிய குமாரியாதவ் சுயநலத்தால் ஜித்தேஷ் சர்மா வாய்ப்பு பறிபோய் விட்டதாக ரசிகர்கள் விமர்சித்து உள்ளனர். பல கிரிக்கெட் வல்லுனர்களும் சூரியகுமார் யாதவை பாராட்டினாலும் சதம் பின்னாடி ஏன் வீரர்கள் ஓடுகிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறி வருகின்றனர்.
சதம் அடித்தால் தான் ரசிகர்கள் மதிக்கிறார்கள் ரசிகர்கள் தங்களை பாராட்டுகிறார்கள் என்பதற்காக வீரர்கள் இப்படி தனிப்பட்ட மைல்களை நோக்கி செல்வதே இதற்கு காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

