நேற்று இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கால் இறுதிப் போட்டியை போன்ற போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சங் 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
மேலும் இந்த போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்த காரணத்தினால் பனிப்பொழிவு இருந்தது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. மேலும் இந்திய வீரர்கள் இந்த மைதானத்தில் எட்டக்கூடிய ஸ்கோரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை கட்டுப்படுத்தினார்கள். இது குறித்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.
இது பற்றி அவர் கூறும் போது “இது மிகச் சிறந்த உணர்வாக இருக்கிறது. நான் எப்போதும் சொல்வதுதான் நல்லவர்களுக்கு நல்லதுதான் நடக்கும். சஞ்சு சாம்சன் வாய்ப்புகள் கிடைக்காத போதும் கடினமாக உழைத்ததற்கு பலன் கிடைத்திருக்கிறது”
“எங்களுக்கு அழுத்தம் இல்லையென்றால் இல்லைதான். ஆனால் பதட்டம் இருக்கிறது. வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கிறது. இதை எப்படி சமாளிப்பது என்பதுதான் முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.

