இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தங்கள் அணிக்குள் எப்படியான மாற்றத்தை பயிற்சியாளர் கம்பீர் கொண்டு வந்திருக்கிறார்? என்பது குறித்து மிகவும் விரிவாக பேசியிருக்கிறார்.
இந்திய டி20 அணி சூரியகுமார் யாதவ் தலைமையில் நாளை டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக களம் இறங்க இருக்கிறது. ஏற்கனவே இந்த வடிவத்தில் உலகச் சாம்பியன் ஆக இருப்பதாலும், மேலும் சொந்த மண்ணில் உலகக் கோப்பை தொடர் நடப்பதாலும் இந்திய அணிக்கு கொஞ்சம் அழுத்தம் காணப்படுகிறது.
சூரியகுமார் யாதவ் கம்பீர் குறித்து பேசும் பொழுது “எங்களுடைய ஓய்வறை அப்படியே இருக்கிறது ஆனால் அதில் உள்ள பெட்டிகள் மட்டும் மாறி இருக்கிறது. கம்பீர் இந்த ஒரு வருடத்தில் எங்கள் அணிக்குள்ளும் மனநிலைக்குள்ளும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். எந்த ஒரு வீரரும் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடாமல் அணியின் நலனுக்காக விளையாடுகிறார்கள்”
“நியூசிலாந்து அணிக்கு எதிராக கேரளா திருவனந்தபுரத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் இஷான் கிஷான் ஒரு சிக்சர் அடித்து சதத்தை எட்டினார். இது எங்கள் அணியின் மனநிலையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இங்கு யாரும் தனிப்பட்ட சாதனையை நோக்குவது இல்லை. அணியின் நலனே முக்கியம். கம்பீர் அந்த அளவிற்கு சுதந்திரத்தை கொடுத்து மனநிலையை உருவாக்கி இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

