கம்பீரை சிரிக்க வைக்க மொத்த டீமும் முயற்சி பண்ணினோம்.. ஆனா கடைசியில வித்தியாசமா நடந்துச்சு – சூரியகுமார் பேச்சு

இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பயிற்சியாளர் கம்பீரய் சிரிக்க வைக்க தாங்கள் முயற்சி செய்ததாகவும் ஆனால் அதில் இறுதியில் என்ன நடந்தது? என்று குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பிறகு மகேந்திர சிங் தோனி கம்பீர் தாங்கள் சிரித்தால் அழகாக இருக்கிறீர்கள் உங்கள் தீவிரத்துடன் ஆன சிரிப்பு மிகவும் அருமை என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பொதுவாகவே கம்பீர் எப்பொழுதும் சிரிக்க மாட்டார். அவர் மிகவும் தீவிரமாக போட்டிக்குள் இருப்பார். எனவே அவர் அருகில் இருப்பவர்களும் சிரிப்பது மிகவும் கடினம். இதனால் அவர் சிரிப்பதை பார்ப்பது மிகவும் அரிய விஷயமாகவே இருந்தது.

- Advertisement -

இது குறித்து சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது “நாங்கள் அவரை உலகக்கோப்பை தொடர் முழுக்க சிரிக்க வைக்க முயற்சி செய்தோம். ஆனால் ஒவ்வொரு போட்டியும் மிகவும் பரபரப்பாக இருந்த காரணத்தினால் அது நடக்கவே இல்லை. இறுதியில் அவர் உலகக் கோப்பையை வென்ற பிறகுதான் சிரித்தார். உண்மையில் அது எங்களை மகிழ்ச்சி படுத்தியது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles