தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல ஆர்சிபி அணிக்கு வாய்ப்புகள் உள்ளதாக சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்திருக்கிறார்.
இந்த முறை அமைந்திருக்கும் ஆர் சி பி அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் யூனிட் இரண்டும் வலிமையானதாக உள்ளது. மேலும் மினி ஏலத்தில் தேவையான பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை வாங்கி பெஞ்ச் வலிமையும் சிறப்பாக மாறி உள்ளது.
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா பேசும்போது ” 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டு சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை தொடர்ந்து வென்ற பொழுது எங்கள் அணியில் இந்திய அணிக்காக விளையாடிய 7, 8 பேர் இருந்தார்கள். தற்போது ஆர்சிபி அணியிலும் அப்படி இருக்கிறார்கள். எனவே இந்த முறை அவர்களுக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது”
“அவர்கள் வெங்கடேஷ் ஐயரை அணியில் சேர்த்து இருக்கிறார்கள். மேலும் தொடர்ந்து ரன்கள் குவித்து படிக்கல் அபாரமான ஃபார்மில் இருக்கிறார். இத்துடன் அவர்களிடம் நிலையான தெளிவான பேட்டிங் வரிசை உள்ளது. எனவே அவர்கள் வலிமை அதிகமாக உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

