ரோகித் சர்மாவிற்கு பிறகு.. இந்திய அணியின் கேப்டனாக இவருக்கே வாய்ப்பு அதிகம்.. கூறுகிறார் சுரேஷ் ரெய்னா

இந்திய அணியின் மகத்தான கேப்டனான மகேந்திர சிங் தோனி 20 ஓவர் உலகக் கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை, ஐசிசி சாம்பியன் டிராபி என மூன்று வடிவிலான ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்காக பெற்றுக் கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

- Advertisement -

ஆனால் அவருக்கு அடுத்து கேப்டனாக பதவி ஏற்ற விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியை நம்பர் ஒன் அரியணையில் ஏற வைத்தார். ஆனால் ஐசிசி கோப்பைகளை அவரால் வெல்ல முடிய வில்லை. அதற்குப் பின்னர் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் நடந்த சில குளறுபடிகளின் காரணமாக விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீங்கி ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

- Advertisement -

ரோகித் சர்மா கேப்டன் சியை ஏற்ற பிறகு 20 ஓவர் உலகக் கோப்பையை தவறவிட்ட இந்திய அணி கடைசியாக சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் ஐசிசி கோப்பையையும் வெல்லாமல் ஏமாற்றம் அளித்தது. சொந்த மண்ணில் நடைபெற்ற இப் போட்டியில் அனைத்து போட்டிகளையும் வென்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் பரிதாப தோல்வி சந்தித்தது.

- Advertisement -

வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக இந்திய அணியை ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களை வைத்து தேர்வு செய்யப்படும் என்று தேர்வுக் குழு வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. எனவே வருகிற ஜூன் மாதத்துடன் ரோகித் சர்மா இந்திய கேப்டன் பதவியில் இருந்து கிட்டத்தட்ட விலகி விடுவார் என்றே தெரிகிறது.

எனவே அவருக்கு அடுத்து இந்திய அணியை வழி நடத்த போகும் கேப்டன் யார்? என்கிற கேள்வி எழும் நிலையில் சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோர் இந்த ரேஸில் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இவர்களை ஒதுக்கிவிட்டு இளம் வீரரான சுப்மான் கில்லுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து இவர் கூறும் பொழுது
“இந்திய அணியின் கேப்டன் பதவியை பெற கில்லுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் கில் கேப்டனாக சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது 23 வயதாகும் கில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வர சரியான தீர்வாக இருப்பார். எனவே இவருக்கே அதிக வாய்ப்பு இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:3 சீசனா என்ன பண்ணிட்டு இருந்தாரு.. அதான் கேப்டன் பதவியில இருந்து தூக்கிட்டாங்க.. காரணத்தைக் கூறும் ராபின் உத்தப்பா

இளம் வீரரான கில் ஏற்கனவே 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அண்டர் 19 அணியை வழிநடத்தி அதில் உலக கோப்பையை வென்று கொடுத்தவர். தற்போது ஐபிஎல்லில் குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே இவர் இந்திய அணி அடுத்த கேப்டனாக வாய்ப்பு பெற்றால் சிறப்பாக வழி நடத்துவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles