புது அணி.. புது பொறுப்பு.. ஐபிஎல் 2024-ல் களமிறங்கும் சின்ன தல ரெய்னா.. சிஎஸ்கே ரசிகர்கள் சோகம்.!

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா, தனக்கென தனி இடத்தையும், ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியவர். இவர் இந்திய அணிக்கு தலைமையும் தாங்கியுள்ளார். மூன்று வடிவங்களான போட்டிகளிலும், சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சுரேஷ் ரெய்னா.

- Advertisement -

எம்.எஸ் தோனி தலைமையின் கீழ் இந்திய அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் விளையாடிய சுரேஷ் ரெய்னா, சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, 11 ஆண்டுகள் ஐபிஎல்-லில் விளையாடினார். 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு, குஜராத் லயன்ஸ் அணியை தலைமை தாங்கினார்.

- Advertisement -

சின்ன தல மற்றும் மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்களால் சுரேஷ் ரெய்னா அழைக்கப்பட்டார். 5000 ரன்கள் எடுத்த முதல் பேட்ஸ்மேன், பவர்பிளேயில் அதிக ரன்கள், அதிக கேட்ச் பிடித்தவர் பட்டியலில், மிகச் சிறந்த பீல்டரான இவர், 107 கேட்சுகளுடன் முதலிடம் என பல சாதனைகளை ஐபிஎல் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் மற்றும் வெளிநாட்டு டி20 மற்றும் டி10 விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா, தற்போது உத்தரபிரதேச டி20 தொடரான யூபிடி20-யில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கத்தில் பிராண்ட் தூதராகவும் உள்ளார்.

கௌதம் கம்பீர், லக்னோ அணியில் இருந்து வெளியேறி, கொல்கத்தா நைட் ரைடர்ஸில் இணைந்தார். இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராக இருந்து வரும், சுரேஷ் ரெய்னா, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மென்டராக இணைவார் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

சுரேஷ் ரெய்னா விரைவில் லக்னோ அணியில் இணைவார் என பரவிய நிலையில், இந்த செய்தியானது, போலியான வதந்தி செய்தி, என செய்தியாளர் அபிஷேக் திரிபாதி, எக்ஸ் தளத்தில் பகிர்ந்து மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர் அபிஷேக் திரிபாதி டுவீட்க்கு, “ஏன் எல்லா நேரத்திலும் உங்கள் செய்திகள் சரியானதாக அமையாதா?” என பதில் டுவீட் செய்துள்ளார் சுரேஷ் ரெய்னா.

ரெய்னாவின் ட்வீட், சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அவர் லக்னோ அணியில் இணைவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர். விரைவில் ஐபிஎல் 2024 தொடங்க உள்ள நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மேனேஜ்மெண்ட்டிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அறிய ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles