நீங்க வேணா பாருங்க.. என்னோட சாதனையை சஞ்சு சாம்சன் நிச்சயம் சமம் செய்வார்.. எனக்கு முழு நம்பிக்கை இருக்கு – சுரேஷ் ரெய்னா ஆதரவு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனின் பேட்டிங் ஃபார்ம் கேள்விகளுக்கு உள்ளாகி வரும் நிலையில் அது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அவருக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

- Advertisement -

வருகிற பிப்ரவரி மாதம் முதல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் இதில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவரது இடம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கிரிக்கெட்டில் பலதரப்பு வட்டாரங்கள் பேசி வரும் நிலையில் சுரேஷ் ரெய்னா டி20 உலக கோப்பை தொடரில் சாம்சன் சதம் அடிப்பார் என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “t20 உலக கோப்பை கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் சதம் அடிப்பார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் அவரிடம் தரமான பேட்டிங் உள்ளது. இதனால் அவர் தனது பழைய பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்து நிச்சயமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்கிற நம்பிக்கை உள்ளது அதுபோக இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் அவருக்கு முழு ஆதரவு அளிக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles