டி20 கிரிக்கெட் மாறிடுச்சு.. பவுலருக்கு எட்டு ஓவர் இருந்தாதான் ஏதாவது பண்ண முடியும்.. வெற்றிக்குப் பின்னர் பேட் கம்மின்ஸ் பேட்டி

நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி பெங்களூர் அணியை வெளுத்து வாங்கியது. இருப்பினும் இலக்கை நெருங்கி வந்த பெங்களூர் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை தழுவியது.

- Advertisement -

சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் குவித்தனர். இந்த ரன்களை எட்டாவது ஓவரிலேயே குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அபிஷேக் ஷர்மா 34 ரன்களில் வெளியேறினார். அதற்குப்பிறகு களமிறங்கிய கிளாஸன் டிராவிஸ் உடன் பாட்னர்ஷிப் அமைத்து இருவரும் பெங்களூரணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். சிறப்பாக விளையாடிய ட்ராவிஸ் ஹெட் 41 பந்துகளில் 9 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 102 ரன்கள் குவித்து அபாரமாக சதம் விளாசினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இவரும் ஆட்டம் இழக்க, கிளாசன் 31 பந்துகளில் ஏழு சிக்ஸர்களுடன் 67 ரன்கள் குவித்தார். பின்னர் இறுதிக்கட்டத்தில் மார்க்ரம் மற்றும் அப்துல் சமத் ஜோடி சிறப்பாக விளையாட, மார்க்ரம் 17 பந்துகளில் 32 ரன்கள், சமாஜ் 10 பந்துகளின் 37 ரன்களும் குவித்தனர். இதனால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 262 குவித்தது. பின்னர் இந்த அபார இலக்கை நோக்கி பெங்களூர் அணி விளையாடியது.

பெங்களூர் அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் குவித்த நிலையில், விராட் கோலி 42 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு டூப்ளஸ்சிஸ் 62 ரன்கள் ஆட்டம் இழக்க, இறுதிக்கட்டத்தில் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலையாக நின்று 35 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்களில் பெங்களூர் அணி 262 ரன்களைக் குவித்தது.

- Advertisement -

எனவே இந்த வெற்றிக்கு பின்னர் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசும் பொழுது
“நான் ஒரு பேட்ஸ்மேன் ஆக இருக்க விரும்புகிறேன். இப்போட்டி ஒரு அற்புதமான விளையாட்டு ஆகவும் அற்புதமான காட்சிகளையும் கொடுத்தது.

இதையும் படிங்க:நீ என்ன அண்டர்டேக்கரா.?. பதிரானாவை கேள்வி எழுப்பும் சிவம் தூபே.. காரணம் என்ன.? அவரே கூறும் சுவாரஸ்ய பதில்

நீங்கள் உங்களால் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டியது அவசியம். டி20 கிரிக்கெட் பொருத்தவரை ஏழு அல்லது எட்டு ஓவர்கள் வீசினால் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த ஆடுகளத்தை ஆராய்வதை நான் நிறுத்தி விட்டேன். சின்னசாமி ஆடுகளம் பேட்டிங்க்கு சாதமாகவே காணப்பட்டது. இந்த போட்டியின் மூலம் நான்கு வெற்றிகள் பெற்றிருப்பது மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles