என் நண்பர் எங்களை வீழ்த்தி விட்டார்.. இந்திய மக்களின் ஆதரவு அந்த சமயத்தில் எங்களுக்கு கிடைக்காது.. தோல்விக்கு பின்னர் கம்மின்ஸ் பேட்டி

17வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இந்த போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இன்னிங்சை தொடங்கியது. கொல்கத்தா அணி வீரர்களின் அபாரமான பந்துவீச்சினால் சன்ரைசர்ஸ் அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. சன்ரைசர்ஸ் அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 19 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 24 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

கொல்கத்தா அணியில் பந்து வீசிய அனைவரும் சிறப்பாக சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதில் குறிப்பாக ஸ்டார்க் மிகவும் சிக்கனமாக பந்து வீசி செய்யும் மூன்று ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதற்குப் பிறகு ரசல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களம் இறங்கி விளையாடியது. மிகவும் கூலாக விளையாடிய இந்த அணியில் குருபாஸ் 32 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 52 ரன்களும் குவித்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்கள். இதன் மூலம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

சன்ரைசர்ஸ் அணியின் தோல்விக்கு பிறகு கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும் பொழுது
“கொல்கத்தா அணியின் பந்துவீச்சு அபாரமானதாக இருந்தது. என்னுடைய பழைய நண்பர் ஸ்டார்க் மீண்டும் திரும்ப வந்து திறமையாக பந்து வீசினார். இன்று எங்களுக்கு இந்த நாள் சிறப்பானதாக அமையவில்லை. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது போலவே மீண்டும் ஒரு முறை நிகழ்ந்து விட்டது. இந்த மைதானத்தில் 200 ரன்கள் குவிக்க முடியவில்லை என்றாலும் 160 ரன்கள் இலக்கு போதுமானதாக இருந்திருக்கும்.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் நாங்கள் மூன்று முறை 250 ரன்கள் குறித்தது சிறப்பானது. இந்த அணியில் நான் இதற்கு முன்னர் பலருடன் வேலை செய்தது கிடையாது. தற்போது இவர்களுடன் சேர்ந்து வேலை செய்து சிறப்பான அனுபவம். ஒரு சிறந்த மற்றும் நல்ல அணி வீரர்களையும், ஊழியர்களையும் கொண்டிருக்கிறோம்.

இதையும் படிங்க :கம்மின்சை சைலன்ஸ் ஆக்கிய கேகேஆர்.. 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்.. இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் தோல்வி

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் மூலம் நாங்கள் அதிக காலம் விளையாடுகிறோம். ஆனால் இதுவே இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போது இவ்வளவு ஆதரவு கிடைக்காது. தற்போது இவ்வளவு ஆதரவு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறி முடித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles