தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடர் சமனில் முடிவடைந்த நிலையில் ஒரு நாள் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 26 ஆம் தேதி பாக்சிங் டேவில் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா மண்ணில் இதுவரை இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை. இதனால் இந்த வரலாற்றை மாற்றும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.
இந்த தொடரில் முகமது சமி விலகி இருப்பது இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் என்னுடைய பிளேயிங் லெவன் என்பது மிகவும் சிம்பிளாக இருக்கும். என்னுடைய தொடக்க வீரராக ஜெயஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவராக தான் இருப்பார்கள். நம்பர் மூன்றாவது இடத்தில் சுப்மன் கில்லை விளையாட வைக்க வேண்டும். நான்காவது இடத்தில் விராட் கோலி இருக்க வேண்டும் என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று ஐந்தாவது இடத்தில் கே.எல். ராகுலும் ஆறாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் விளையாட வேண்டும் என்று கூறியுள்ள கவாஸ்கர், இந்த இருவரும் தங்களுடைய இடத்தை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
ஏழாம் இடத்தில் அஸ்வின் மற்றும் எட்டாவது இடத்தில் ஜடேஜா ஆக இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களுக்கும் தன்னுடைய அணியில் இடம் கொடுத்துள்ள கவாஸ்கர் மூன்று வேக பந்துவீச்சாளர்களாக முகேஷ் குமார் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரை தேர்வு செய்திருக்கிறார்.
இந்தத் தொடரில் முதலில் இடம் பெற்றிருந்த ருதுராஜ் காயம் காரணமாக பாதியில் வெளி இருப்பது குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்க அணிலும் முக்கிய பவுலர்கள் இல்லாத நிலையில் இந்த தொடரை இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

