வருகிற பிப்ரவரி மாதம் முதல் இந்திய அணி டி20 உலக கோப்பையில் விளையாட உள்ள நிலையில், ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளும் ஒரே பிரிவில் இருப்பது குறித்து இந்திய முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஐசிசி மீது சில விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “சமீபத்திய உலகக் கோப்பைகளில் நடப்பது போலவே இந்த முறையில் நடந்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளையும் ஐசிசி ஒரே பிரிவில் வைத்துள்ளது. இந்த இரண்டு அணிகளும் மோத வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக மட்டும் இந்த இரண்டு அணிகளையும் ஒரே பிரிவில் வைக்கவில்லை. மாறாக இவை இரண்டு அணிகளும் எந்த சிரமமும் இன்றி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணிகளை எளிதாக வீழ்த்தி விடும். எனவே லீக் சுற்றுக்குப் பிறகுதான் விறுவிறுப்பான போட்டிகள் நடைபெறும். கடந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அமெரிக்க அணியிடம் தோல்வியடைஞ்சதை நாம் பார்க்கிறோம். அமெரிக்க அணி எம்எல்சி தொடர் மூலமாக நிறைய அனுபவம் பெற்று விளையாடி வருகிறார்கள். எனவே அவர்களும் தொடர்ந்து முன்னேறி வருகிறார்கள்” என்று பேசி இருக்கிறார்.

