மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்சிஜி) டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25 இன் நான்காம் டெஸ்ட் தொடரில் யார் வெல்ல போவது என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரிடமும் இருந்து வருகிறது.
தற்போது அனைவரும் இந்திய அணிக்கு தனது அறிவுரை வழங்கி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்காரும், நிதீஷ் குமார் ரெட்டியே நான்காம் இடத்தில் வைத்துவிட்டு, ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை சேர்க்கக்கூடாது என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
சுனில் கவாஸ்கரின் கருத்து:
நான்காவது டெஸ்ட் MCG க்கு முன்னதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் சுனில் கவாஸ்கர் கூறினார்: “அவர்களால் நிதிஷ் குமார் ரெட்டியை கைவிட முடியாது. ஏனென்றால் அவர் நான்காவது வேகப்பந்து வீச்சாளர். இந்திய அணியானது இரண்டு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் நிதிஷ் குமாரை மட்டும் வைத்துக்கொண்டு அடுத்த போட்டியில் பங்கு பெறுவதை பார்க்க முடியவில்லை. ஏனெனில் அடுத்த போட்டியில் குறைந்தபட்சம் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களாவது வந்தாக வேண்டும்.
ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக ஹர்ஷித் வர வாய்ப்பில்லை. ஃபாலோ-ஆனில் இருந்து இந்திய அணியை காப்பாற்றிய அவரே எப்படி கைவிட முடியும்?” என்று கூறியுள்ளார்.
இதையும் கொஞ்சம் படிங்க: இந்த அந்தஸ்து வேண்டாம்னு.. தோனி 5 நிமிடத்தில் அந்த முடிவை எடுத்தார்.. யாரிடமும் சொல்லல – ரவி சாஸ்திரி பேட்டி
பிரிஸ்பேனில் ஆகாஷ் தீப்பின் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை என்றாலும், அவரது 31 ரன்கள் இந்தியாவுக்கு ஃபாலோ-ஆனைத் தவிர்க்கவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் டிரா ஆவதற்கும் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

