சுப்மன் கில்லுக்கு மட்டும் ஒரு தனி நியாயமா.. இதே ஒரு தமிழக வீரர்னா அவ்வளவு தான் கதை கந்தல் – சுப்ரமணியம் பத்ரிநாத் ஆவேசம்

அண்மையில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் இந்தியாவை வென்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றியுள்ளது. இத்தொடரில் இந்தியா முழுக்க முழுக்க பும்ராவை நம்பியே இருந்தது. எதிர்பார்க்கப்பட்ட வீரர்களிடம் இருந்து பெரிதாக எந்த ஒரு பங்களிப்பும் இல்லாததால் பல்வேறு விமர்சனங்கள்.

- Advertisement -

முன்னாள் தமிழக மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான சுப்ரமணியம் பத்ரிநாத் இந்திய நட்சத்திர வீரர் சுப்மன் கில்லின் ஆட்டம் வைத்து சற்று கிரிக்கெட் அரசியலைக் கடுமையாகப் பேசியுள்ளார். பத்ரிநாத் இது போன்ற பேச்சுக்களை வழக்கமாகவே பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கில் 5 இன்னிங்சில் வெறும் 93 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதற்க்கு முன்பு நடந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. 2023ஆம் ஆண்டு அவர் தனது கரியரின் உச்சத்துக்கு செல்லும் அளவிற்கான ஆட்டத்தை வெளிகாட்டினார். ஆனால் கடந்த வரும் அதற்கு நேர்மையான ஓர் கிரிக்கெட்டை அவர் ஆடியுள்ளார்.

- Advertisement -

கில் குறித்து பத்ரிநாத் பேசியதாவது, ” எனக்கு இதைப் பார்க்க கஷ்டமாக உள்ளது. அவரின் லெவலுக்கு அவரிடம் எதிர்பார்ப்பதை அவர் பூர்த்தி செய்யவில்லை. ரன்கள் அடிக்கலாம், அடிக்காமல் போகலாம் ஆனால் களத்தில் நின்று ஆட வேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக இல்லை. அவர் எதிரணி பந்துவீச்சாளர்களை சோர்வடைய செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. “

” களத்தில் நின்று 100 பந்துகளைக் குறைந்தது ஆடி பந்தைப் பழையது ஆக்க வேண்டும். இவ்வாறாக தான் கில்லின் ஆட்டம் இருந்திருக்க வேண்டும். இதனைத் தான் ஆஸ்திரேலிய வீரர்கள் லபுஷேன், ஸ்மித் செய்து பும்ராவை காயத்திற்குத் தள்ளினர். சுப்மன் கில் போன்ற ஆட்டத்தை எதேனும் ஒரு தமிழக வீரர் ஆகியிருந்தால் எப்போதோ அணியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பார். ” என இறுதியில் கடுமையாகப் பேசினார் பத்ரிநாத்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles