சாம்சன் செய்யறது ரொம்ப தப்பு.. பேட்டிங் கோச் சொல்வதை கேட்கிறது இல்லை.. டெக்னிக் பிரச்சனை இருக்கு – பத்ரிநாத் ஆதங்கம்

தற்போது கடந்த போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் மீண்டும் இந்திய பிளேயிங் லெவனுக்குள் வந்திருக்கிறார். இந்த போட்டியில் மிகச் சிறப்பாக தொடக்கத்தை கொடுத்த அவர் அதை பயன்படுத்தி பெரிய ஸ்கோர் அடிக்காமல் வழக்கம்போல் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

அவருடைய பேட்டிங் டெக்னிக்கில் வெளிப்படையாகவே பிரச்சனை இருப்பது தெரிகிறது. பந்து அவரது உடம்புக்குள் உள்நோக்கி வரும் பொழுது அவர் தடுமாறுகிறார். தற்போது அவரது இந்த பிரச்சனையை சுட்டிக்காட்டி சுப்பிரமணியம் பத்ரிநாத் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் பேசும் பொழுது ” சஞ்சு சாம்சனுக்கு பந்து உடம்புக்குள் உள்நோக்கி வரும் பொழுது பிரச்சனை ஆரம்பிக்கிறது. அப்பொழுது அவருடைய பேட்டிங் டெக்னிக்கில் அடிப்படைத் தவறு இருப்பது தெரிகிறது. அவர் மூன்று ஸ்டெம்புகளையும் பவுலருக்கு காட்டுகிறார். நாம் சிறுவயதில் பயிற்சிக்கு செல்லும்போது முதல் இப்படி மூன்று ஸ்டெம்புகளையும் பவுலருக்கு காட்டக் கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் அவர் அந்தப் பெரிய தப்பை செய்கிறார்”

- Advertisement -

“மேலும் இந்திய அணியில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பயிற்சிளர்கள் வெளியில் இருக்கிறார்கள். எனவே இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சொல்வதை இவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை என்று நான் நினைக்கிறேன். இவருக்கு வெளிப்படையாகவே பேட்டிங் டெக்னிக் பிரச்சனை உள்ளது. ஆனால் உலகக்கோப்பையில் அதை சரி செய்வது கடினம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles