ருதுராஜ் நீங்க எங்களை முட்டாள்னு நினைச்சுட்டு இருக்கீங்களா.. நீங்க சொல்றதெல்லாம் பொய் – பத்ரிநாத் கோபம்

நேற்று சிஎஸ்கே அணி பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்ததற்கு காரணம் கூறிய ருதுராஜ் ஆடுகளம் மெதுவாக இருந்தது என்று தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு சுப்பிரமணியம் பத்ரிநாத் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் கேப்டன் ருதுராஜ் 22 பந்துகளை சந்தித்து மிகவும் மெதுவாக 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்த நிலையில் அவர் மிகவும் மெதுவாக விளையாடியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது குறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் பேசும்போது “நேற்று ஆடுகளம் மெதுவாக இருந்தது என்று ஒரு ருதுராஜ் கூறுவதை நம்புவதற்கு நாங்கள் என்ன முட்டாள்களா? ஆடுகளம் மெதுவாக இருந்திருந்தால் சிஎஸ்கே 200 ரன்கள் தாண்டி எப்படி எடுத்திருக்க முடியும்; இல்லை பஞ்சாப் இரண்டாவது விளையாடும் பொழுது ஒரு பந்து கூட அழுத்தத்தில் இல்லாமல் எப்படி பேட்டிங் செய்திருக்க முடியும்?”

- Advertisement -

“சிஎஸ்கே மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது. எனவே தான் சீக்கிரத்தில் அவுட் ஆகிவிட்டால் தங்கள் அணி சுருண்டு விடும் என்கின்ற பயத்தில்தான் ருதுராஜ் மெதுவாக விளையாடினான். ஆனால் ஆடுகளம் எதுவாக இருந்தது என்று அவர் கூறுகிறார்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles