அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுக்கான வீரர்களை வாங்குவதில் தயார் நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணிக்கு தற்போது தரமான ஒரு சுழற் பந்துவீச்சாளர் மற்றும் டெத் ஓவர்கள் வீசக்கூடிய ஒரு வேகப்பந்துவீச்சாளர் தேவை உள்ளது.
மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங் பலவீனமாக இருந்த நிலையில் தொடர் நடந்து கொண்டிருக்கும்போதே ஆயுஷ் மாத்ரே டெவால் பிரேவிஸ் என அதிரடியான வீரர்களை எடுத்து வலுப்படுத்திக் கொண்டது. மேலும் சிஎஸ்கேவில் இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷாம் கரணை ராஜஸ்தான் அணிக்கு அதிக விலைக்கு கொடுத்து அதே விலைக்கு தகுந்த சஞ்சு சாம்சனை தங்கள் அணிக்கு மாற்றிக் கொண்டது.
இந்த சூழ்நிலையில் இது குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறும் போது ” சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இப்போது நான்கு ஓவர்கள் வீசக்கூடிய சுழற் பந்துவீச்சாளர் தேவை என்று இருக்கும் நிலையில் தற்போது ரவி பிஸ்னாயை தேர்வு செய்வது நல்ல விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் டெத் ஓவர்களில் வீசக்கூடிய வேகபந்து வீச்சாளர் தேவை இருக்கும் நிலையில் அதற்கு ஏற்றவாறு பதிரானா, ஜெரால்டு கோட்சே மற்றும் நோர்க்கியா போன்ற வீரர்களில் ஒருவரை தேர்வு செய்வது அத்தியாவசியமாகும் என்று அவர் பேசி இருக்கிறார்.

