கம்பீர் நீங்க தேவையே கிடையாது.. உங்களுக்கு பதிலா 50, 000 சம்பளத்துக்கு ஆள் வச்சுக்கலாம் – பத்ரிநாத் கோபம்

இந்தியா மற்றும் தமிழக முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் பயிற்சியாளர்கள் வீரர்களை புள்ளி விபரங்களை தாண்டி மதிப்பிட வேண்டும் என்றும், ஒருவர் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற்றார் மற்றும் தோல்வி அடைந்தார் என்ற எண்களை வைத்துக்கொண்டு வீரர்களை மதிப்பிடக்கூடாது என்றும் கம்பீர் குறித்து கோபமாக விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி நிர்வாகம் இதுவரையில் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து வீரர்களை தேர்வு செய்து விளையாட வைத்து வந்தது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இடதுகை வீரர்கள் அவர்கள் பக்கம் அதிகம் இருக்கின்ற காரணத்தினால் அக்சர் படேல் நீக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. மேலும் இந்த போட்டியில் சேர்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் பௌலிங் மற்றும் பேட்டிங்கில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாததும், இந்திய அணி தோல்வி அடைந்ததும் பெரிய விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

- Advertisement -

இது குறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் பேசும்பொழுது “ஒரு வீரர் எத்தனை போட்டிகளில் சிறப்பாக விளையாடினார் தோல்வி அடைந்தார் என்று பார்ப்பது அவசியம்தான். ஆனால் அதை மட்டுமே வைத்துக்கொண்டு வீரர்களை மதிப்பிடக்கூடாது. அவர் பார்மில் இருக்கிறாரா உடல் தகுதியுடன் இருக்கிறாரா? என்று பார்க்க வேண்டும். வெறும் புள்ளி விவரங்களை வைத்து பார்ப்பதாக இருந்தால் அதற்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் அனலைஸ்ட் வைத்துக் கொள்ளலாம். கம்பீர் போன்று ஒரு சர்வதேச வீரரை பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles