நேற்று டெல்லி அணிக்கு எதிராக சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 115 ரன்கள் அடித்தார். அவர் இந்த சதத்திற்கு தன்னை எப்படி தயார் படுத்திக் கொண்டார்? என்று பத்ரிநாத் கூறியிருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் ஆகி சிஎஸ்கே அனுப்பி வந்த சஞ்சு சாம்சன் மூன்று போட்டிகளாக சரியாக விளையாடவில்லை. இந்த மூன்று போட்டிகளாக சிஎஸ்கே அணியும் தோல்வியடைந்தது. எனவே தனிப்பட்ட முறையில் பெரிய அழுத்தத்தில் இருந்து அவர் சதம் அடித்து அணியை வெல்ல வைத்திருப்பது பெரிய விஷயமாக இருக்கிறது.
இதுகுறித்து பத்ரிநாத் பேசும்போது ” இந்த போட்டிக்கு முன்பாக மைதானத்தில் இருந்த சிஎஸ்கே பயிற்சியாளர் குழுவில் இடம் பெற்றிருக்கும் ஸ்ரீதரன் ஸ்ரீராமிடம் பேசினேன். அவர் போட்டிக்கு முதல் நாள் முழுமையாக பயிற்சிக்கு சஞ்சு சாம்சன் வரவில்லை என்று சொன்னார். மேலும் அதற்கு முந்தைய நாள் 3 மணி நேரம் தொடர் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், அதற்கு முன்பாக மைதானத்தில் நடு அடுக்களத்தில் விளையாடாமல் உள் அரங்கில் விளையாடியதாகவும் கூறினார்”
“இதன் மூலம் சாம்சன் தன்னை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார் என்று தெரிகிறது. நேற்று ஆட வரும் போதும் அவரிடம் ஒரு அமைதி இருந்தது. இந்த சேப்பாக்கம் ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டுமோ அப்படி விளையாடி சதம் அடித்தார். நானும் சதம் அடித்து அணியும் வெற்றி பெற்று இருப்பதால் தற்போது பெரிய நிம்மதியுடன் இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

