இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த காலத்தில் மட்டுமில்லாமல் எல்லா காலத்திலும் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் என வாதிடலாம் என்று இங்கிலாந்து முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பாராட்டி இருக்கிறார்.
நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது செமி பைனலில் இந்திய அணியின் இங்கிலாந்து அணிக்கு எதிராக மிக பரபரப்பான போட்டியில் இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் கைகளில் இருந்த இந்த போட்டியை பும்ரா தனி ஒருவராக பறித்து இந்திய அணிக்கு கொடுத்தார்.
இதுகுறித்து ஸ்டூவர்ட் பிராட் பேசும்பொழுது ” நாம் இப்பொழுது எல்லா காலத்திலும் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா என வாதிடலாம். கடந்த காலத்தில் சிறந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் மால்கம் மார்ஷல் போன்ற ஒருவர் உலகக் கோப்பை செமி பைனலில் இப்படி பந்து வீசி நாம் பார்க்கவில்லை. நான் பார்த்ததில் பும்ராதான் மிகச்சிறந்தவர்”
“ஒரு வேகப்பந்துவீச்சாளர் முதல் பந்தையே மெதுவாக வீசுவது அரிதானது. ஹாரி புரூக் என்ன செய்வார் என முன்கூட்டியே கணித்த காரணத்தினால்தான் பும்ரா மெதுவான பந்தை முதலிலேயே வீசியிருக்கிறார். இப்படி தன் திறமையையும் எதிரணியையும் சரியாகப் புரிந்து செயல்படுவதின் மூலம் பெரிய வெற்றிகளை பெறக்கூடிய உயரத்திற்கு சென்று கொண்டே இருக்கிறார்” என்று பாராட்டியிருக்கிறார்.

