இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கவுள்ளது. கடந்த 6 வருடங்களாக இந்தத் தொடரில் இந்திய அணியே பயங்கர ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
2018/19, 2020/21 என அடுத்தடுத்து இரண்டு முறை சொந்த மண்ணிலேயே கோப்பையை பறிகொடுத்துள்ளது ஆஸ்திரேலியா. அதுவும் கடந்த முறை கில், பண்ட் ஆகியோரின் அதிரடியில் காப்பாவில் வரலாற்றுச் சாதனை படைத்து கோப்பையை வென்றது கிரேட்ட்ஸ்ட் ஆப் ஆல் டைம் அளவு சிறந்தது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் நேர்காணலில் ஆஸ்திரேலிய வீரர்கள், நடக்கவுள்ள இந்தியா டெஸ்ட் தொடர் குறித்த சில கேள்விகளுக்கு கார சாரமான பதில் கொடுத்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித்திடம், இந்திய அணியில் அவரை அதிகம் கோபப் படுத்தும் வீரர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. கோலி, ரோஹித், பும்ரா மூவரில் யாரேனும் ஒருவரை தேர்வு செய்வார் என எதிர்பார்த்த நிலையில் அவர் வேறொரு பதிலளித்தார்.
இதற்கு பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித், ” இந்திய அணியில் என்னை அதிகம் கடுபேற்றக் கூடிய வீரர் என்றால் அது ரவீந்திர ஜடேஜா தான். அதற்குக் காரணம் அவர் மிகச் சிறந்த வீரராக செயல்படுவது தான். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எதுவாக இருந்தாலும் அவர் எதேனும் ஒரு வழியில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டே இருப்பார். ” என்றார்.
ஸ்மித் – ஜடேஜா இடையேயான கடுமையான போட்டியில் இருவரும் சமமாக ஆடியிருந்தாலும் ஜடேஜாவின் கைகளே சற்று ஓங்கியுள்ளது. இதுவரை 8 முறை அவரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். மறுபக்கம் சுமாராக ஆடிய ஸ்மித் 33 சராசரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ் ஹேசல்வுட்டும் ஸ்டீவ் ஸ்மித் கூறியதை ஒப்புக் கொண்டு, ” நானும் அந்த வகையில் ஜாதேஜாவையே தேர்ந்தெடுப்பேன் ” எனக் கூறினார். ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதும் எதேனும் ஒரு வகையில் பங்காற்றிக் கொண்டே இருப்பார். தரவரிசைப் பட்டியலில் கூட முதலிடத்தில் நீடித்துக் கொண்டுள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக கோப்பையை பார்க்காத ஆஸ்திரேலியா வீரர்கள் இம்முறை எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்ற வேகத்தில் உள்ளார்கள். பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா மற்றொரு உச்சத்தை தொட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை, ஆஷஸ் என தொடர் வெற்றிகளை குதித்து வருகிறார். அவரின் தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலியா அணி இந்தியாவை டெஸ்ட் தொடரில் எதிர் கொள்ளவுள்ளது.

