எனக்கு 25 கோடி இதுக்கு தான் கொடுத்தாங்க.. ஐபிஎல் இறுதிப் போட்டி.. பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் ஸ்டார்க்

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா அணி வீரர் ஸ்டார்க் சன்ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன்களை தற்போது நடு நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதையே டாஸ் போட்டு முடித்த பிறகு கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்டபோது நான் டாஸ் வென்றிருந்தால் பந்துவீச்சை தேர்வு செய்திருப்பேன் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடங்கினார்கள். கடந்த முதல் பிளே ஆப் போட்டியில் ஸ்டார்க் ஓவரை எதிர்கொண்ட ஹெட் இரண்டாவது பந்திலேயே வெளியேறியதால் இந்த முறை இன்னிங்ஸை அபிஷேக் ஷர்மா தொடங்கினார். முதல் ஓவரை வீசிய ஸ்டார்க் முதல் நான்கு பந்துகளை ஸ்டம்புக்கு வெளியே வீச, ஐந்தாவது பந்தை நேராக ஸ்டம்ப் லைனில் வைத்தார். பந்து ஸ்டம்புக்கு நேராக வருகிறது என்று நினைத்து
பேட்டை வைத்த அபிஷேக் ஷர்மா, பந்தானது ஆப் ஸ்டெம்புகளின் பெயில்சை தாக்கியது.

- Advertisement -

இதனால் இரண்டு ரன்களோடு ஏமாற்றத்துடன் தனது முதல் விக்கெட்டை அபிஷேக் ஷர்மா பறி கொடுத்தார். அதற்குப் பிறகு அடுத்த ஓவரை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் தனது முதல் பந்திலேயே வைபவ் அரோராவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது ஆரம்பித்த சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட் வீழ்ச்சி அதற்குப் பிறகு யார் நின்றாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை

கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய திருப்பாதி இந்த முறை 13 பந்துகளில் ஒன்பது ரன்களில் இருந்த போது ஸ்டார்க் வீசிய அபாரமான பந்தில் மிக மோசமான ஷாட் விளையாடி வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய மார்க்ரம் 23 பந்துகளில் 20 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, நித்திஷ் ரெட்டி 10 பந்துகளில் 13 ரன்கள் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

தற்போது வரை சன் ரைசர்ஸ் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 13 ஓவர்களில் 82 ரன்கள் குவித்த நிலையில் விளையாடி வருகிறது. இன்னும் ஏழு ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் கைவசம் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே உள்ளதால் நூறு ரன்களைக் கடப்பதே சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய வேளையாக இருக்கும்.

இதையும் படிங்க:இந்தாங்க பிளாங்க் செக்.. கொல்கத்தா அணிக்கு இனி நீங்கதான்.. கம்பீரை விடாத ஷாருக்கான்.. பறிபோகும் இந்திய பயிற்சியாளர் வாய்ப்பு

இந்தப் போட்டியில் அபாரமாக பந்து வீசி இருக்கும் ஸ்டார்க் 3 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். சீசனின் தொடக்கத்தில் 25 கோடி கொடுத்து ஸ்டார்கை வாங்கி இருக்கவே கூடாது, ரன்களை அதிகமாக கொடுக்கிறார் போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா சென்ற பிறகு இவரது பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்து வருகிறது. முக்கியமான கட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து 25 கோடி கொடுத்து தன்னை இதற்காகத்தான் வாங்கினார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles