ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கஒஇ அணி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது. ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றிய நிலையில், முதல் டி20 போட்டியை இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
80 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்த நிலையில் 2வது டி20 போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இலங்கை அணி தரப்பில் நிசாங்கா – குசால் மெண்டிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. 2வது ஓவரிலேயே மெண்டிஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, 4வது ஓவரில் நிசாங்கா 8 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் 5வது ஓவரில் ஃபெர்னாண்டோ 1 ரன்னிலும், 6வது ஓவரில் கமிண்டு மெண்டிஸ் டக் அவுட்டாகி வெளியேறினர். இதனால் 7 ஓவர்களிலேயே இலங்கை அணி 38 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஷனகா 15 ரன்களிலும், மிஷாரா 20 ரன்களிலும், அசலங்கா 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சமீரா டக் அவுட்டாகி வெளியேறினர்.
அசால்ட் செய்த ஜிம்பாப்வே
இறுதியாக இலங்கை அணி 17.4 ஓவர்களில் 80 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிராட் ஈவன்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா தலா 3 விக்கெட்டுகளையும், முசாராபணி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 14.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது.
இதன் மூலமாக இலங்கை அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி புதிய வரலாற்றை படைத்துள்ளது. ஏற்கனவே ஜிம்பாப்வே சென்ற போது இந்திய அணி ஒரு டி20 போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தது. தற்போது இலங்கை அணி தோல்வி அடைந்ததால், இந்திய அணி ரசிகர்கள் அந்த அணியை கிண்டல் செய்து வருகின்றனர்.

