இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்ல கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்திக் பாண்டியா தானாக விலக வேண்டும் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூடியிருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறந்த வீரர்கள் கிடைத்து வலிமையான அணியாக பேப்பரில் காணப்படுகிறது. ஆனால் அவர்களால் முக்கிய போட்டிகளில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல முடியவில்லை.
இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்போது “இந்த நிலைமையை மாற்ற ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா மூவரும் இணைந்து பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பில் தொடரக்கூடாது. இது அதிர்ஷ்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொண்டு வரும்”
“ஹர்திக் பாண்டியா தானாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி சூரியகுமார் தலைமையில் பின் விளையாட சம்மதம் என்று அணி நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும். இது மட்டும்தான் அந்த அணி கோப்பையை வெல்வதற்கு ஒரே வழி” என்று கூறி இருக்கிறார்.

