தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை வெளியே அனுப்பி விட்டதாக ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.
கடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடவில்லை. மேலும் அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிட்டது. இந்த நிலையில் அந்த அணிக்குள் நிறைய குழப்பங்கள் காணப்படுகிறது.
இது குறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “இப்போது மும்பை வீட்டை விட்டு வெளியே போ என ஹர்திக் பாண்டியாவை அனுப்பி விட்டதாகவே நான் நினைக்கிறேன். அவர்கள் அடுத்த சீசனில் முறையாக பிரிந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் நல்ல முறையில் பிரிய வேண்டும். அடுத்த மூன்று போட்டியில் புதிய வீரர்களுக்கு மொத்தமாக வாய்ப்பு கொடுக்க வேண்டும்”
“புதிய கேப்டனாக பும்ரா வரவேண்டும் என்றாலும் தற்போது அவருக்கு ஓய்வு கொடுத்து அடுத்த சீசனில் அதை செய்ய வேண்டும். மேலும் ரோகித் மற்றும் சூர்யா இருவருக்கும் ஓய்வு கொடுத்து விட வேண்டும். சூர்யாவுக்கு மனரீதியாக ஓய்வு தேவைப்படுகிறது” என்று கூறி இருக்கிறார்.

