சொன்னா கேளுங்க.. தகுதியே இல்லாத இந்த இந்திய வீரரை டீமை விட்டு தூக்குங்க.. தமிழக வீரர் சாய் சுதர்சன் இல்லனா ருத்ராஜுக்கு இடம் தரணும் – ஸ்ரீகாந்த் பேட்டி

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு போகும் வாய்ப்பே இழந்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் சீனியர் வீரர்கள் உட்பட அடுத்த தலைமுறை என அறியப்படும் சில வீரர்களும் மோசமாக விளையாடி உள்ளார்கள். குறிப்பாக கில் ஐந்து இன்னிங்ஸ்களில் வெறும் 93 ரன்களே எடுத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் நடைபெறும் தொடர்களில் சுப்மன் கில் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளில் அவர் ஒரு இன்னிங்ஸில் கூட 40 ரன்களை தாண்டவில்லை.

- Advertisement -

தற்போது இந்திய ஜாம்பவான் கிரிஸ் ஸ்ரீகாந்த், ‘கில்லினை ஒரு மிகைப்படுத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்’ என்று அழைத்துள்ளார்.

- Advertisement -

அவருக்கு எதுக்கு இத்தனை வாய்ப்புகள்?

அவரது யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய இந்திய ஜாம்பவான் மற்றும் 1986 உலகக் கோப்பை வென்ற வீரரான கிரிஸ் ஸ்ரீகாந்த், “நான் எப்போதும் சொல்லி வந்தேன், ஷுப்மன் கில் ஒரு மிகைப்படுத்தப்பட்ட கிரிக்கெட் வீரர் என்று, ஆனால் யாரும் என் பேச்சை கேட்கவில்லை. அவன் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்.

கில் இத்தனை வாய்ப்புகள் பெறுகிற போது, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வாய்ப்பு கொடுக்கலாமே? ” என்று தனது கேள்வியை இந்திய அணி தேர்வாளர்கள் இடத்தில் வைத்துள்ளார்.

- Advertisement -

புதிய திறமைகளை தேர்ந்தெடுங்கள்:

“சூர்யகுமார் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த தொடக்கத்தை கொடுக்கவில்லை என்றாலும், அவருக்கு கிரிக்கெட்டை சார்ந்த நுட்பமும் திறனும் உள்ளது. ஆனால் தேர்வாளர்களும் நிர்வாகமும் அவரை தற்போது வெள்ளை பந்து விளையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்திய அணி தேர்வாளர்கள் புதிய திறமைகள் வாய்ந்த வீரர்களையும் பார்க்க வேண்டும்,”

கில்லையே சுற்றி திரிகிறார்கள்:

சூர்யகுமாரைத் தவிர மற்ற இரண்டு இந்திய பேட்டர்களை டெஸ்ட் அணியில் தேர்வு செய்ய ஸ்ரீகாந்த் பரிந்துரைத்தார். “உதாரணமாக, ருதுராஜ் கெய்க்வாட் முதல் தர கிரிக்கெட்டில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் இந்திய அணி தேர்வாளர்கள் அவரையும் தேர்வு செய்யவில்லை.

இதற்கிடையில், சாய் சுதர்சன் போன்றவர் ‘ஏ’ சுற்றுப்பயணங்களில் அருமையாக விளையாடி மிளிர்ந்து கொண்டிருக்கிறார். இத்தகைய திறமைகளுக்கு நீங்கள் ஊக்கமளிக்க வேண்டும். அதற்கு பதிலாக, அவர்கள் கில்லைத் தேர்வு செய்வதிலேயே சுற்றித் திரிகிறார்கள்,” என்று தனது வருத்தத்தையும் கோபத்தையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles